சுடச்சுட

    

    316 பேருக்கு ஓய்வூதிய ஆணை வழங்கல்: தொழிலாளர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

    By DIN  |   Published on : 18th September 2016 04:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தொழிலாளர் நல வாரியத்தில் 316 பேருக்கு ஓய்வூதிய ஆணை வழங்கப்பட்டுள்ளது. 60 வயது பூர்த்தி அடைந்த தொழிலாளர்கள் நேரடியாக ஓய்வூதிய விண்ணப்பத்தை அளிக்கலாம் என நாமக்கல் தொழிலாளர் ஆய்வாளர் மஞ்சள்நாதன் தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: சமூகப் பாதுகாப்புத் திட்ட அலுவலகத்தில் கடந்த 2015 ஜூலை 1-ஆம் தேதி முதல் கடந்த மார்ச் 31-ஆம் தேதி வரை ஓய்வூதியம் கேட்டு 1,200 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன.
    கடந்த மார்ச் 3ஆம் தேதி தொழிலாளர் ஆய்வாளராக பொறுப்பேற்றப்பின் முதல் கட்டமாக 520 விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு அசல் ஆவணங்கள் அனைத்தும் நேரில் சரிபார்க்கப்பட்டு இதுவரை 316 விண்ணப்பதாரர்களுக்கு, ஓய்வூதிய ஆணை வழங்கப்பட்டுள்ளது.
    ஓய்வூதிய ஆணை வழங்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பெயர், முகவரி அடங்கிய பட்டியல் அலுவலகத்தின் அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. மீதம் உள்ள விண்ணப்பங்கள், தற்போதைய தொழிலாளர் அலுவலரால் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. தொழிலாளர்கள் வதந்திகளை நம்பாமல் ஓய்வூதிய விண்ணப்பம் குறித்த சந்தேகங்களை அலுவலக நாள்களில் தொழிலாளர் அலுவலரை நேரில் சந்தித்து விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
    மேலும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம், இதர 16 அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் தொடர்ந்து புதிய உறுப்பினர் சேர்க்கை, ஏற்கெனவே பதிவு செய்த தொழிலாளர்களின் அட்டைகள் கணினி மூலம் புதுப்பித்து விவரங்கள் அனைத்தும் கணினியில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
    உறுப்பினராகப் பதிவு செய்ய 60 வயது நிறைவு பெற்ற தொழிலாளர்கள், ஓய்வூதிய விண்ணப்பத்தை நேரடியாக தொழிலாளர் அலுவலர் அலுவலகத்தில் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai