சுடச்சுட

    

    குமாரபாளையம் நகர அதிமுக சார்பில், முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
     குமாரபாளையம் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு நகரச் செயலர் ஏ.கே.நாகராஜன் தலைமை வகித்தார். நகர்மன்றத் தலைவர் சிவசக்தி கே.தனசேகரன், முன்னாள் நகரச் செயலர் எம்.எஸ்.குமணன், துணைத் தலைவர் கே.எஸ்.எம்.பாலசுப்ரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரத் துணைச் செயலர் ஏ.ஜி.என்.திருநாவுக்கரசு வரவேற்றார்.
     சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற திரைப்பட இயக்குநர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது: தமிழக முதல்வர் ஜெயலலிதா, அண்ணாவின் திட்டங்கள், சிந்தனைகளை மக்களுக்கான நலத் திட்டங்கள் மூலம் செயல்படுத்தி வருகிறார். இத்திட்டங்களால் பயனடையாதோர் தமிழகத்தில் யாரும் இல்லை எனும் நிலை உள்ளது.
     எனவே, வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவின் வெற்றிக்கு தமிழக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றார். நகர்மன்ற உறுப்பினர்கள் ஆர்.முருகேசன், கே.ஆர்.பாஸ்கரன், எஸ்.ஆர்.சேகர், சிங்காரவேலன், நகரப் பொருளாளர் எஸ்.என்.பழனிச்சாமி, நிர்வாகிகள் சி.ஜி.அர்ச்சுனன், சி.ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai