சுடச்சுட

    

    உள்ளாட்சித் தேர்தலில் சுயேச்சை சின்னம் பயன்படுத்த வலியுறுத்தல்

    By நாமக்கல்,  |   Published on : 19th September 2016 08:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உள்ளாட்சித் தேர்தலில் கட்சி சின்னங்களைத் தவிர்த்து, அனைத்து பதவிகளுக்கும், சுயேச்சை சின்னம் பயன்படுத்த வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்புச் செயலாளர் செ.நல்லசாமி தெரிவித்தார்.
     இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
     உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள், தமிழக வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது. 16-ஆம் தேதி தமிழகத்தில் அமைதியாக நடந்த பொது வேலைநிறுத்தப் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது வரவேற்கத்தக்கது.
     காவிரிப் பிரச்னையை நீதிமன்றம் மூலம் தீர்வு காண வேண்டும். நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்துக்கு உரிய தண்ணீரை கர்நாடகாவில் தேக்காமல் சேலம் மாவட்டம், மேட்டூரில் தேக்கும்பட்சத்தில் காவிரிநீர் பிரச்னை வராது.
     உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாகவும், அரசியல் கட்சிகளின் குறுக்கீடுகள் இல்லாமல் நடக்க, அரசியல் கட்சிகளின் சின்னங்கள் இல்லாமல் அனைத்துப் பதவிகளுக்கும் சுயேச்சை சின்னங்களைப் பயன்படுத்த வேண்டும்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai