சுடச்சுட

    

    கர்நாடக முதல்வர் உருவ பொம்மை எரிப்பு: 12 பேர் கைது

    By ராசிபுரம்,  |   Published on : 19th September 2016 08:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி நதிநீர் பிரச்னை தொடர்பாக நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற உரிமை மீட்புப் பேரணியில் தீக்குளித்து உயிரிழந்த இளைஞருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
     ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் முன் நடைபெற்ற நிகழ்ச்சியில் உயிரிழந்த இளைஞர் விக்னேஷ்-க்கு அஞ்சலி செலுத்திய பின்னர், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் சிலர் திடீரென கர்நாடக முதல்வர் சித்தராமையா உருவ பொம்மையை எரித்தனர். இதையடுத்து போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தி 12 பேரைக் கைது செய்தனர்.
     
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai