சுடச்சுட

    

    கர்நாடக வாகனங்களுடன் பாதுகாப்புக்குச் செல்லும் போலீஸார்

    By பரமத்தி வேலூர்,  |   Published on : 19th September 2016 08:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமத்திவேலூர் காவிரி பாலம் அருகே தாற்காலிக சோதனை சாவடி அமைக்கப்பட்டு கர்நாடக பதிவெண் கொண்ட வாகனங்கள், கர்நாடக மாநிலம் வழியாகச் செல்லும் வாகனங்கள் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படுகின்றன.
     இதுகுறித்து பரமத்தி வேலூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சுஜாதா கூறியதாவது:
     தமிழகத்துக்குள் வந்து செல்லும் கர்நாடக பதிவெண் கொண்ட வாகனங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற தகவலின் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்நாடக வாகனங்கள் தமிழகத்துக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
     தமிழகத்திலிருந்து கர்நாடக மாநிலம் நோக்கிச் செல்லும் வாகனங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் நாகராஜன், நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மகேஷ்வரன் ஆகியோர் உத்தரவிட்டிருந்தனர்.
     அதன் அடிப்படையில் பரமத்திவேலூர் காவிரி பாலம் அருகே தாற்காலிக சோதனை சாவடி அமைக்கப்பட்டு கர்நாடக பதிவெண் கொண்ட வாகனங்கள், கர்நாடக மாநிலம் வழியாக வேறு மாநிலங்களுக்குச் செல்லும் வாகனங்கள் அனைத்தும் தடுத்து நிறுத்தப்படுகிறது.
     பின்னர் போலீஸார் பாதுகாப்புடன் கீரம்பூர் சுங்கச் சாவடி வரை பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டு நாமக்கல் போலீஸார் மூலம் நாமக்கல் மாவட்ட எல்லை வரைக் கொண்டு சென்று விடப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தார்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai