சுடச்சுட

  

  குடும்பத் தகராறு: மாமியாரை தாக்கிய மருமகள் கைது

  By பரமத்தி வேலூர்,  |   Published on : 19th September 2016 08:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பரமத்திவேலூர் அருகே குடும்பத் தகராறு காரணமாக மாமியாரையும் அவரது சகோதரரையும் அம்மிக்கல்லால் தாக்கிய மருமகளை போலீஸார் கைது செய்தனர்.
   பரமத்திவேலூர் அருகே பொத்தனூரைச் சேர்ந்தவர் பொன்னம்பலம் மனைவி செல்லம்மாள் (64). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். முதல் மகன் திருமணமாகி வெளிநாட்டில் வசிக்கிறார். 2-ஆவது மகன் முரளிமோகன் (25) மனைவி மகேஷ்வரியுடன் (23) பெற்றோருடன் வசித்து வந்தார்.
   மகேஷ்வரிக்கும், மாமியார் செல்லம்மாளுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுமாம், இந்த நிலையில் செல்லம்மாளின் அண்ணன் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பெரியசாமி (65) தங்கை வீட்டுக்கு வந்துள்ளார். சனிக்கிழமை இரவு செல்லம்மாள், பெரியசாமி, மகேஷ்வரி மட்டும் வீட்டில் இருந்தனர்.
   அப்போது செல்லம்மாள் தனது மருமகள் மகேஷ்வரியைப் பற்றி பெரியசாமியிடம் குறைக் கூறியுள்ளார். இதில், ஆவேசமடைந்த மகேஷ்வரி வீட்டிலிருந்த அம்மிக்கல்லை எடுத்து இருவரையும் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.
   அலறல் சப்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு ஈரோடு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்ததும் துணைக் கண்காணிப்பாளர் சுஜாதா விரைந்து சென்று விசாரணை நடத்தினார். பின்னர், மோகனூர் சாலையில் நடந்து சென்ற மகேஷ்வரியை பிடித்து விசாரித்தனர். அப்போது மாமியாரையும், அவரது சகோதரரையும் தாக்கியதாகத் தெரிவித்தார். இதையடுத்து போலீஸார் மகேஷ்வரியைக் கைது செய்தனர்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai