சுடச்சுட

    

    சமுதாய வளைகாப்பு நடத்தி சமத்துவத்தை உருவாக்கியவர் முதல்வர்: அமைச்சர் பி.தங்கமணி

    By நாமக்கல்  |   Published on : 19th September 2016 08:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சமுதாய வளைகாப்பு நடத்தி முதல்வர் ஜெயலலிதா சமத்துவத்தை உருவாக்கித் தந்துள்ளார் என்றார் மின்சாரம், மதுவிலக்கு, ஆயத் தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி.
     சமூக நலம், சத்துணவுத் திட்டத் துறையின், நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள் சார்பில், சமுதாய வளைகாப்பு விழா நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே சூரியம்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
     மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தலைமை வகித்தார். நாமக்கல் எம்பி பி.ஆர்.சுந்தரம், திருச்செங்கோடு எம்எல்ஏ பொன்.சரஸ்வதி முன்னிலை வகித்தனர்.
     விழாவில் மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி பங்கேற்று கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பை நடத்தி வைத்துப் பேசியது:
     மகளிர் தன் கர்ப்ப காலங்களில் தங்களையும் தன் கருவில் வளரும் குழந்தையையும் எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து அறிந்து கொள்வதற்காக சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன என்றார்.
     இந்நிகழ்ச்சியில் 280-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டது. முன்னதாக கர்ப்பிணிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கர்ப்ப காலத்தில் உண்ண வேண்டிய உணவு வகைகள் குறித்து அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை அமைச்சர் திறந்துவைத்தார்.
     நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட திருச்செங்கோடு குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் சு.சண்முகவடிவு வரவேற்றார். திருச்செங்கோடு வருவாய்க் கோட்டாட்சியர் ஜி.மகாத்மா, வட்டாட்சியர் தமிழ்மணி, டி.சி.எம்.எஸ்.தலைவர் பி.என்.கந்தசாமி, நகர்மன்றத் தலைவர் (பொறுப்பு) ஜி.சித்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai