Enable Javscript for better performance
ராசிபுரத்தில் சமுதாய வளைகாப்பு- Dinamani

சுடச்சுட

    


    ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் சார்பில், கர்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி ராசிபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
     விழாவில் 150 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சிகள் நடத்தி வைக்கப்பட்டு தட்டு, மேலங்கி, வளையல், மஞ்சள், குங்குமம், மலர்கள் போன்ற அரசின் சீதனப் பொருள்கள் வழங்கப்பட்டன.
     பின்னர் உணவு பரிமாறப்பட்டன. முன்னதாக ராசிபுரம் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் ஜி.டி.மாலதி வரவேற்றார். பிள்ளாநல்லூர் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் கே.செல்வி, பங்கேற்று வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தி வைத்தார்.
     பரமத்திவேலூரில்...
     பரமத்தியில் நடைபெற்ற விழாவுக்கு குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் (பொறுப்பு) லட்சுமி தலைமை வகித்தார்.
     வளைக்காப்பு விழாவின் முக்கியத்துவம் குறித்தும், தமிழக அரசால் பெண்கள் பெறப்படும் நலத் திட்டங்கள் குறித்தும், குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பெறப்படும் நலத் திட்டங்கள் குறித்தும் விளக்கிப் பேசினார்.
     பரமத்தி அரசு ஆரம்ப சுகாதார அலுவலர் மருத்துவர் செந்தில்குமார் கலந்து கொண்டு கர்ப்பிணிகள் கடைப்பிடிக்க வேண்டிய உணவு, தடுப்பூசி முறைகள் குறித்துப் பேசினார். விழாவில், 240 கர்ப்பிணிகளுக்கு பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. மேற்பார்வையாளர்கள் மனோன்மணி நன்றி கூறினார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai