Enable Javscript for better performance
அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தக் கோரிக்கை

    By நாமக்கல்,  |   Published on : 20th September 2016 08:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரசு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, உயர் நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்த வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
     நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே வேப்பிலைக்குட்டை கிராம மக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மு.ஆசியா மரியத்திடம் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்:
     வேப்பிலைக்குட்டை கிராமத்தில், பொது வீதி, பள்ளி வளாகம், விளையாட்டு மைதானம், மாரியம்மன் கோயில் திடல், புதுப்பட்டி மாரியம்மன் கோயில் திடல், எல்லைக் கருப்பண்ண சுவாமி கோயில் திடல் ஆகிய பொதுமக்களின் பயன்பாட்டுக்குச் சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து 13 பேர் வீடு கட்டி உள்ளனர்.
     இதுகுறித்து அதிகாரிகளிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் பல முறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. விசாரணையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 8-ஆம் தேதி ஆக்கிரமிப்பை அகற்ற மாவட்ட நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
     ஆனால். மாவட்ட நிர்வாகம் இதுவரை ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் நில ஆக்கிரமிப்பு செய்த நபர்கள், எங்கள் மீது கொலை மிரட்டல் விடுக்கின்றனர். அதனால் எங்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இம்மனு மீது உரிய விசாரணை நடத்தி அரசுக்குச் சொந்தமான நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai