சுடச்சுட

    

    அரசு வழங்கிய பட்டாவுக்கு பணம் கேட்டு மிரட்டல்: ஆட்சியரிடம் புகார்

    By நாமக்கல்,  |   Published on : 20th September 2016 08:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரசு வழங்கிய பட்டாவுக்கு பணம் கேட்டு மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
     நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் அருகே காளிப்பட்டி மதுரைவீரன் தெருவைச் சேர்ந்த பொதுமக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மு.ஆசியா மரியத்திடம் திங்கள்கிழமை அளித்த மனு:
     இந்தக் கிராமத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், 35 வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டன. இதுவரை ஒதுக்கப்பட்ட பயனாளிகளுக்கு பட்டா வழங்கவில்லை. 20 பேருக்கு ஒதுக்கப்பட்ட பட்டாவை வாங்கி வைத்துக் கொண்டு ஒரு மனையின் மீது ரூ. 30,000 கொடுத்தால்தான் பட்டா தருவோம் என சிலர் மிரட்டுகின்றனர். அதே கிராமத்தைச் சேர்ந்த 20 பேருக்கு பட்டா இல்லாத நிலையில், வெளியூரைச் சேர்ந்தவர்களுக்கு அந்த வீட்டுமனைகள் விற்கப்பட்டுள்ளன. இதனால், பாதிக்கப்பட்ட தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai