Enable Javscript for better performance
இருசக்கர வாகனப் பெட்டியை உடைத்து ரூ. 1.58 லட்சம் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    இருசக்கர வாகனப் பெட்டியை உடைத்து ரூ. 1.58 லட்சம் திருட்டு

    By நாமக்கல்,  |   Published on : 20th September 2016 08:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஓய்வுபெற்ற ஆசிரியரின் இருசக்கர வாகனப் பெட்டியை உடைத்து ரூ. 1.58 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
     நாமக்கல் மாவட்டம், மோகனூர் சுப்பிரமணியபுரம் எரியூரான் தோட்டத்தைச் சேர்ந்தவர் நாச்சியண்ணன் (65). அவரது மனைவி மரகதம். வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்து ஓய்வு பெற்றவர். தற்போது, கரூர் மாவட்டம், வாங்கபாளையத்தில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், திங்கள்கிழமை காலை மோகனூரில் உள்ள ஒரு வங்கிக்கு நாச்சியண்ணன் இருசக்கர வாகனத்தில் வந்தார். வங்கியிலிருந்து ரூ. 1.58 லட்சம் பணத்தை எடுத்த அவர், இருசக்கர வாகனத்தின் பின்புறப் பெட்டியில் பணத்தை வைத்துவிட்டு எரியூரான் தோட்டத்தில் உள்ள தனது வீட்டு வாசலில் வாகனத்தை நிறுத்தி விட்டுச் சென்றார். அப்போது பின்னால் வந்த 3 இளைஞர்கள் அவரது இருசக்கர வாகனப் பெட்டியை உடைத்து, அதிலிருந்து பணத்தை எடுத்தனர். அதைக்கண்ட நாச்சியண்ணன், அவர்களைப் பிடிப்பதற்குள் 3 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் மோகனூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai