சுடச்சுட

  

  இருவரை அரிவாளால் வெட்டிய இளைஞர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு

  By பரமத்திவேலூர்,  |   Published on : 20th September 2016 08:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  முன்விரோதம் காரணமாக இருவரை அரிவாளால் வெட்டிய வழக்கில் தொடர்புடைய நபர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
   திருவள்ளூர் மாவட்டம், அரக்கோணம், அசோக்நகரைச் சேர்ந்தவர் வீரமணி. இவரது மகன் அப்பு (எ) யுவராஜ் (23). இவர், தற்போது பரமத்தி வேலூர் அருகே நன்செய் இடையாறில் வசித்து வருகிறார்.
   இவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் கோபிக்கும் (20) முன்விரோதம் இருந்து வந்தது.
   கடந்த ஜூன் மாதம் 17-ஆம் தேதி இரவு நான்கு சாலையில் ஒரு கடை அருகே நின்று கொண்டிருந்த கோபியையும், அவரது நண்பர் மணிகண்டனையும் சிலர் அரிவாளால் வெட்டினர்.
   இதுதொடர்பாக பரமத்திவேலூர் போலீஸார் வழக்குப் பதிந்து சம்பவத்தில் தொடர்புடைய யுவராஜை கைது செய்தனர். அவருடன் சேர்ந்து தாக்குதலில் நடத்திய 4 பேர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றனர்.
   இந்த நிலையில், யுவராஜ் மீது பொதுமக்களிடம் அரிவாளைக் காட்டிய மிரட்டியதாக வழக்குகள் இருப்பதால் அவரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஷ்வரன், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தார்.
   அதை ஏற்று மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் யுவராஜை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai