Enable Javscript for better performance
உள்ளாட்சித் தேர்தல் வாக்காளர் விவரம் வெளியீடு: நாமக்கல் மாவட்டத்தில் 13.51 லட்சம் வாக்காளர்கள்- Dinamani

சுடச்சுட

    

    உள்ளாட்சித் தேர்தல் வாக்காளர் விவரம் வெளியீடு: நாமக்கல் மாவட்டத்தில் 13.51 லட்சம் வாக்காளர்கள்

    By நாமக்கல்,  |   Published on : 20th September 2016 08:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் எண்ணிக்கை விவரம் வெளியிடப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் 6,62,520 ஆண் வாக்காளர்கள், 6,88,919 பெண் வாக்காளர்கள், திருநங்கைகள் 108 பேர் என மொத்தம் 13,51,547 வாக்காளர்கள் உள்ளனர்.
     நாமக்கல் மாவட்டத்தில் ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் திங்கள்கிழமை வெளியிட்டார்.
     இதை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் எஸ்.கவிதா பெற்றுக் கொண்டார். இந்தப் பட்டியலின்படி மாவட்டத்தில் உள்ள 15 ஊராட்சி ஒன்றியங்களில் 4,09,191 ஆண் வாக்காளர்கள், 4,23,325 பெண் வாக்காளர்கள், திருநங்கைகள் 28 பேர் என மொத்தம் 8,32,744 வாக்காளர்கள் உள்ளனர்.
     19 பேரூராட்சிகளில் 1,05,951 ஆண் வாக்காளர்கள், 1,11,070 பெண் வாக்காளர்கள், திருநங்கைகள் 20 பேர் என மொத்தம் 2,17,041 வாக்காளர்கள் உள்ளனர். 5 நகராட்சிகளில் 1,47,078 ஆண் வாக்காளர்கள், 1,54,624 பெண் வாக்காளர்கள், திருநங்கைகள் 60 பேர் என மொத்தம் 3,01,762 வாக்காளர்கள் உள்ளனர்.
     ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் மொத்தமாக 6,62,520 ஆண் வாக்காளர்கள், 6,88,919 பெண் வாக்காளர்கள், திருநங்கைகள் 108 பேர் என மொத்தம் 13,51,547 வாக்காளர்கள் உள்ளனர்.
     வாக்காளர் பட்டியல் விவரம் ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சி, நகராட்சி அலுவலகங்களில் வைக்கப்படும். பெயரை சேர்க்கவோ, பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளர் விவரத்தில் ஆட்சேபனை இருந்தால் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு அளிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai