சுடச்சுட

  

  ஆழ்குழாய்க் கிணறுக்கு மின் மோட்டார் பொருத்தி தண்ணீர் விநியோகம் செய்ய வேண்டும் என கிராம மக்கள் காலிக் குடங்களுடன் வந்து ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
   நாமக்கல் மாவட்டம், பேளுக்குறிச்சி அருகே க.வளையப்பட்டி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த 2010-இல் குடிநீர் வசதிக்காக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது.
   ஆனால், இதுவரை அந்தத் தொட்டியில் தண்ணீர் ஏற்றி குடிநீர் விநியோகம் செய்யவில்லை. தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க கடந்த மாதம் ஆழ்குழாய்க் கிணறு அமைக்கப்பட்டது. அப்போது மின் மோட்டார் பொருத்தவில்லை.
   இதனால், அவதியடைந்த பொதுமக்கள் திங்கள்கிழமை காலை காலிக் குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியத்தை சந்தித்து, புதிதாக அமைக்கப்பட்ட ஆழ்குழாய்க் கிணறுக்கு மின்மோட்டார் பொருத்தி தண்ணீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மனு அளித்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai