சுடச்சுட

    

    பாவை கல்வி நிறுவனங்களுக்குள்பட்ட பாவை காலேஜ் ஆப் இன்ஜினியரிங் கல்லூரியின் அனைத்துத் துறைகள் சார்பில், தேசிய அளவிலான ஒரு நாள் கருத்தரங்கம் "டெக்பெஸ்ட் 2 கே16' என்ற தலைப்பில் சனிக்கிழமை நடைபெற்றது.
     பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் என்.வி.நடராஜன் விழாவுக்கு தலைமை வகித்தார். மாணவர் ஆர். சந்தோஷ்குமார் வரவேற்றார். நிகழ்ச்சியை கல்வி நிறுவனங்களின் தாளாளர் மங்கைநடராஜன் குத்துவிளக்கேற்றித் தொடக்கி வைத்தார்.
     நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சேலம் ஏரோ ஸ்பேஸ் இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட்., நிறுவனர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ஆர்.சுந்தரம் பங்கேற்றுப் பேசியதாவது:
     மக்கள்தொகை அதிகமுள்ள நம் நாட்டில் புதுமை கண்டுபிடிப்புகள் மிகவும் குறைவாக உள்ளன. புது படைப்பை உருவாக்குபவர்களுக்கே உலகில் அங்கீகாரம் கிடைக்கும் என்றார்.
     நிகழ்ச்சியில் கருத்தரங்கு மலர் வெளியிடப்பட்டது. பல்வேறு கல்லூரி, பல்கலைக்கழகங்களிலிருந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்று தங்களுடைய ஆராய்ச்சிக் கட்டுரைகளையும், தனித்திறமைகளையும் வெளிப்படுத்தினர். போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், துறை வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கும் சான்றிதழ்கள், பரிசுத் தொகையை ஆடிட்டர் திரு.என்.வி.நடராஜன் வழங்கினார்.
     நிகழ்ச்சியில் பாவை கல்வி நிறுவனங்களின் இயக்குநர் (நிர்வாகம்) கே.கே.ராமசாமி, இயக்குநர் (சேர்க்கை) கே.செந்தில், இயக்குநர் (மாணவர் நலன்) அவந்திநடராஜன், முதல்வர் தேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai