சுடச்சுட

    

    தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய ஆணை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

    By நாமக்கல்,  |   Published on : 20th September 2016 08:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக அமைப்புசாரா தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வழங்க மறுப்பதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
     நாமக்கல் மாவட்ட அனைத்து அமைப்புசாரா கட்டுமானத் தொழிற்சங்கக் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்புத் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். பொதுச்செயலர் கலைவாணன் வரவேற்றார்.
     இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் மணிவேல் ஆர்ப்பாட்டத்தைத் தொடக்கி வைத்தார். கடந்த 2015 ஜூலை 1-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் அளித்த 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் சுமார் 2,000 பேர் உள்ள நிலையில், 310 பேருக்கு ஓய்வூதிய ஆணை வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
     இன்னும் உள்ள 170 பேருக்கும் ஓய்வூதிய ஆணை வழங்க வேண்டும். 15 நல வாரியங்களின் கல்வி உதவித்தொகையை காலம் கடத்தாமல் கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கு உதவித்தொகை உடனே வழங்க வேண்டும்.
     அமைப்புசாரா மற்றும் 15 வாரியங்கள் கட்டுமானம், ஓட்டுநர் நல வாரியம் உள்ளிட்டவைகளுக்கு இயற்கை, விபத்து மரணம், திருமணம், மகப்பேறு உதவித் தொகைகள் 2 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. அதை உடனடியாக வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
     தொழிற்சங்க நிர்வாகிகள் விஸ்வநாதன், சுந்தரமூர்த்தி, அருணாசலம், செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai