Enable Javscript for better performance
பரமத்திவேலூர் ஏலச் சந்தையில் வாழைத்தார் விலை சரிவு- Dinamani

சுடச்சுட

    

    பரமத்திவேலூர் ஏலச் சந்தையில் வாழைத்தார் விலை சரிவு

    By பரமத்தி வேலூர்,  |   Published on : 20th September 2016 08:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமத்திவேலூர் வாழைத்தார் ஏலச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் வாழைத்தார் குறைந்த விலைக்கு ஏலம் போனது.
     பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளையும் வாழைத்தார்கள் வெளி மாவட்ட, மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
     இதில் சிறு விவசாயிகள் பரமத்திவேலூர் வாழைத்தார் சந்தைக்கு தங்களது வாழைத்தார்களைக் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.
     கடந்த வாரம் விநாயகர் சதுர்த்தியையொட்டி, நடைபெற்ற ஏலத்தில் அதிகபட்சமாக பூவன் வாழைத்தார் ரூ. 700-க்கும், ரஸ்தாலி ரூ. 400-க்கும், பச்சைலாடன் ரூ.400-க்கும், கற்பூரவள்ளி ரூ .300-க்கும் ஏலம் போனது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ. 7-க்கு விற்பனையானது.
     நிகழ்வாரம் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைத்தார்கள் விற்பனைக்கு வந்திருந்தன. இதில், பூவன் அதிகபட்சமாக ரூ.500-க்கும், ரஸ்தாலி அதிகபட்சமாக ரூ.300-க்கும், பச்சைலாடன் அதிகபட்சமாக ரூ.300-க்கும், கற்பூரவள்ளி ரூ.250-க்கும், மொந்தன் ஒன்று ரூ.5-க்கும் விற்பனையானது. தற்போது விசேஷ நாள்கள் இல்லாததால் வாழைத்தார்களின் விலை சரிந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai