Enable Javscript for better performance
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த அரசுப் பணியாளர்கள் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த அரசுப் பணியாளர்கள் கோரிக்கை

    By நாமக்கல்,  |   Published on : 20th September 2016 08:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தையே அரசு அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
     இச்சங்கத்தின் நாமக்கல் மாவட்ட சிறப்புப் பொதுக் குழுக் கூட்டம் மாவட்டத் தலைவர் ரவீந்திரன் தலைமையில் நாமக்கல்லில் அண்மையில் நடைபெற்றது.
     சங்க மாநிலத் தலைவர் செல்வராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அகில இந்திய மகா சம்மேளன தேசியக் குழு உறுப்பினர் தம்பிராஜா, மாவட்ட நிர்வாகிகள் விஜயன், துரைராஜூ, பன்னீர்செல்வம், வீராசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
     நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தமிழக அரசின் நிரந்தரப் பணியிடங்களில் தொகுப்பூதியம், மதிப்பூதியம் ஒப்பந்த முறைகளில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிவோரை நிரந்தரப்படுத்த வேண்டும்.
     நாமக்கல் நகரில் போக்குவரத்து நெரிசலை சீராக்கும் வகையில், திருச்சி சாலையை அகலப்படுத்தவும், புறநகரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். இரவு நேரங்களில் ரயில் நிலையத்துக்குச் செல்ல பேருந்துகளை இயக்க வேண்டும்.
     நாமக்கல் நகரப் பேருந்து நிலையத்துக்குள் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில், இலவச கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். கட்டண கழிப்பறையில், கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க வேண்டும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai