சுடச்சுட

    

    பள்ளிக்குச் செல்வதாகக் கூறி சென்ற காணாமல்போன மகளை மீட்டுத் தரக் கோரி, அவரது பெற்றோர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
     நாமக்கல் மாவட்டம், மங்களபுரம் அருகே தாண்டவனம்பாளையத்தைச் சேர்ந்த பெரியசாமி, அவரது மனைவி மல்லிகா ஆகியோர் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியத்திடம் திங்கள்கிழமை அளித்த மனு:
     எங்களது மகள் சுகன்யா (16). இவர், ஆயில்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தார். தினமும் அரசுப் பேருந்தில் செல்லும் சுகன்யா, பள்ளி முடிந்து இரவு 7 மணிக்கு வீட்டுக்கு திரும்புவது வழக்கம்.
     இந்த நிலையில், கடந்த ஜூலை 22-ஆம் தேதி பள்ளிக்குச் செல்வதாகக் கூறிச்சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை.
     அவரைக் கண்டுபிடித்து தரக்கோரி மங்களபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். புகார் தெரிவித்து 2 மாதங்களுக்கு மேல் ஆகியும் சுகன்யாவை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்கவில்லை. மகளை மீட்டு ஒப்படைக்க காவல்துறைக்கு ஆட்சியர் உத்தரவிட வேண்டும்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai