Enable Javscript for better performance
மக்கள் குறைதீர் கூட்டத்தில் 31 பேருக்கு நலத்திட்ட உதவி- Dinamani

சுடச்சுட

    

    மக்கள் குறைதீர் கூட்டத்தில் 31 பேருக்கு நலத்திட்ட உதவி

    By நாமக்கல்,  |   Published on : 20th September 2016 08:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

     மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 31 பேருக்கு ரூ. 49 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
     மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
     முதியோர், விதவை, கல்வி உதவித்தொகை வேண்டியும், குடிசை மாற்று வாரியத்தில் வீடு வேண்டியும், புதிய குடும்ப அட்டைகள் என மொத்தம் 846 மனுக்கள் வரப்பெற்றன.
     இந்த மனுக்களைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர், உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். கூட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில், மொத்தம் 31 பயனாளிகளுக்கு ரூ.49,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
     சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனித் துணை ஆட்சியர் என்.பாலச்சந்திரன், மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலர் கே.எஸ்.முரளிகிருஷ்ணன், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலர் எஸ்.ராமகிருஷ்ணன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் க.சுப்பிரமணி, ரெட்கிராஸ் ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் கண்ணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai