சுடச்சுட

  

  "மின் விநியோகத்தில் தனியார் வருவதன் மூலம் மின் கட்டணம் குறையும்'

  By நாமக்கல்,  |   Published on : 20th September 2016 08:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மின் விநியோகத்தில் தனியார் வருவதன் மூலம் மின் கட்டணம் குறையும் என்றார் பேராசிரியர் ஆர்.ஞானதாஸ்.
   குமாரபாளையம் எக்ஸல் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மின்னியல் மற்றும் மின்னணு பொறியியல் துறை சார்பில், சீரான மின் விநியோகத்தில் தொழில்நுட்ப சவால்கள் என்ற தலைப்பிலான மின் ஆற்றல் தொழில்நுட்பக் கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.
   கருத்தரங்கை கல்லூரி முதல்வர் ஈ.பழனிச்சாமி தொடங்கி வைத்தார். துறைத் தலைவர் வி.எஸ்.அருள்முருகன் வரவேற்றார்.
   சிறப்பு விருந்தினராக புதுச்சேரி பொறியியல் கல்லூரி மின்னியல், மின்னணு பொறியியல் துறைத்தலைவர் ஆர்.ஞானதாஸ் பேசியது:
   இந்தியாவில் மின்விநியோகம் மாநில மின்வாரியங்கள், பொதுத்துறை மின்விநியோக நிறுவனங்கள் வாயிலாக பெரும்பகுதி மின் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தனியார் துறையில் மட்டும் டாடா, ரிலையன்ஸ், டோரண்ட், ஜி.எம்.ஆர்., பி.ஜி.ஆர்., அதானி பவர் உள்ளிட்ட நிறுவனங்கள் மின்விநியோகத்தில் ஈடுபட்டு வருகின்றன. தனியார் துறை மின் விநியோக நிறுவனங்கள் வாயிலாக 19.85 சதவீதம் மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
   பொதுப்பயன்பாடு, வீடுகளில் மின் பயன்பாடு அதிகமாகி வருவதால் நாட்டின் ஒட்டுமொத்த தேவையும் அதிகரித்து வருகிறது. இதற்கு ஏற்றாற்போல் நாட்டில் தனியார் மின்விநியோகிப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
   மின் விநியோக நிறுவனங்களின் போட்டிகள் மென்மேலும் அதிகரித்து வரும் போக்கினால் மக்களுக்கு குறைந்த விலையில் மின்சாரம் கிடைக்கும் என்றார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai