சுடச்சுட

  

  லாரிகளை இயக்குவதில் சிக்கல்: நாமக்கல்லுக்கு சரக்கு ரயிலில் வந்தது 2,600 டன் மக்காச்சோளம்

  By நாமக்கல்,  |   Published on : 20th September 2016 08:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காவிரி பிரச்னை காரணமாக கர்நாடக மாநிலம் வழியாக வட மாநிலங்களிலிருந்து லாரிகள் மூலம் நாமக்கல்லுக்கு மக்காச்சோளம் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சரக்கு ரயில் மூலம் 2,600 டன் மக்காச்சோளம் நாமக்கல்லுக்குக் கொண்டு வரப்பட்டது.
   கோழிப் பண்ணைகளில் கோழிகளுக்கு வழங்கப்படும், தீவனத்தில் முக்கிய மூலப்பொருளாக மக்காச்சோளம் உள்ளது. அதன்படி நாமக்கல் மண்டலத்தில் உள்ள சுமார் 1,000 கோழிப் பண்ணைகளுக்கு தேவைப்படும் மக்காச்சோளம் நாள்தோறும் லாரிகள் மூலம் கர்நாடகா, மகாராஷ்டிரா, பிகார் போன்ற வட மாநிலங்களில் இருந்து நாமக்கல்லுக்கு லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகின்றன.
   வட மாநிலங்களுக்குச் செல்லும் லாரிகள் கர்நாடகம் வழியாகவே தமிழகத்துக்குள் வர வேண்டும். இந்த நிலையில், காவிரி பிரச்னையால், கர்நாடக மாநிலத்தில் தொடரும் வன்முறை சம்பவங்களால் கடந்த ஒரு வாரமாக நாமக்கல்லுக்கு கர்நாடகத்திலிருந்து மக்காச்சோளம் ஏற்றிய லாரிகள் வரவில்லை. அதனால் மக்காச்சோளத்துக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.
   இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் நாமக்கல் முட்டைக்கோழி உற்பத்தியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த பண்ணையாளர்கள் நேரடியாக பிகார் சென்று அங்கு விவசாயிகளிடம் மக்காச்சோளத்தை கொள்முதல் செய்து ரயில் மூலம் நேரடியாக நாமக்கல்லுக்கு அனுப்பி வைத்தனர். அதையடுத்து, நாமக்கல்லுக்கு சரக்கு ரயில்கள் மூலம் கொண்டு வரப்பட்ட 2,600 டன் எடையுள்ள மக்காச்சோளம் அங்கிருந்து லாரிகள் மூலம் கோழிப்பண்ணைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
   வட மாநிலங்களிலிருந்து புரோக்கர்கள் மூலம் மக்காச்சோளம் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. அதன்படி ஒரு டன் மக்காச்சோளம் புரோக்கர்கள் மூலம் ரூ.1,950-க்கு வாங்கப்பட்டு வந்தது.
   தற்போது நேரடியாக கொள்முதல் செய்வதால் மக்காச்சோளம் ஒரு டன் ரூ.1,830-க்கு வாங்கப்பட்டுள்ளது என முட்டைக்கோழிப் பண்ணையாளர்கள் சங்க நிர்வாகி வாங்கிலி சுப்பிரமணியம் தெரிவித்தார்.
   
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai