Enable Javscript for better performance
குமாரபாளையம் நூற்பாலையில் தீ விபத்து: ரூ. 20 லட்சம் மதிப்பிலான பஞ்சு, இயந்திரங்கள் சேதம்- Dinamani

சுடச்சுட

    

    குமாரபாளையம் நூற்பாலையில் தீ விபத்து: ரூ. 20 லட்சம் மதிப்பிலான பஞ்சு, இயந்திரங்கள் சேதம்

    By குமாரபாளையம்,  |   Published on : 21st September 2016 08:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குமாரபாளையம் நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.20 லட்சம் மதிப்பிலான நூற்பாலை இயந்திரங்கள், பஞ்சு பேல்கள் எரிந்து சேதமடைந்தன.
     குமாரபாளையம் அம்மன் நகர் பகுதியில் வீரப்பன், மோகன் ஆகியோருக்கு சொந்தமான நூற்பாலை இயங்கி வருகிறது. இங்கு, செவ்வாய்க்கிழமை தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராமல் தீப்பிடித்தது. பஞ்சில் பிடித்த தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியதில் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.
     கரும்புகை கிளம்பியதால் தொழிலாளர்கள் பீதியில் வெளியே தப்பியோடினர். தகவலறிந்து, பவானி தீயணைப்பு நிலைய அலுவலர் பொன்னாமலை தலைமையில் விரைந்த தீயணைப்புப் படையினர் தண்ணீரைப் பீய்ச்சியடித்து சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாகப் போராடி நூற்பாலையில் பிடித்த தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். விபத்தில், ரூ. 20 லட்சம் மதிப்பிலான நூற்பாலை இயந்திரங்கள், பஞ்சு பேல்கள் எரிந்து சேதமடைந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. மின் கசிவால் விபத்து நேரிட்டதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர். விபத்து குறித்து குமாரபாளையம் போலீஸார் விசாரிக்கின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai