சுடச்சுட

  

  கொசு ஒழிப்பு பணிக்கு 800 தாற்காலிக பணியாளர்கள் நியமனம்: ஆட்சியர் தகவல்

  By நாமக்கல்,  |   Published on : 21st September 2016 08:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கொசு ஒழிப்பு பணிகளுக்காக 809 தாற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம்.
   டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
   இதில் ஆட்சியர் பேசியது: கொசு புழு ஒழிப்பு பணிக்காக பொது சுகாதார துறையின் மூலம் ஏற்கெனவே 180 தாற்காலிக களப்பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகளில் 205 பேர், 19 பேரூராட்சிகளில் 124 பேர், ஒவ்வொரு வட்டாரத்துக்கும் 20 பேர் வீதம் 300 பேர் என மொத்தம் 809 தாற்காலிக களப் பணியாளர்கள் கொசு ஒழிப்பு பணிகளுக்கு நியமிக்கப்பட்டு, கொசு ஒழிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
   மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலமாக கிராமங்கள்தோறும் காய்ச்சல் கண்டுபிடிப்புக்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த சிறப்பு முகாமின்போது காய்ச்சல் கண்ட நபர்களை வீடு வீடாகச் சென்று கண்டறிந்து அவர்களுக்கு தேவையான பரிசோதனை, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
   மாவட்ட தலைமை மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலை உறுதிப்படுத்த எலிசா முறையில் இலவசமாக ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் சாதாரண காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படும் நபர்களின் பட்டியல் சேகரிக்கப்பட்டு அந்தப் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு உடனடியாக மருத்துவக் குழு சென்று காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
   தனியார் பள்ளிகள், கல்லூரிகள், சினிமா திரையரங்குகள், தொழிற்சாலைகளில் கொசு புழுக்கள் உற்பத்தி ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் பொது சுகாதார சட்டப்படி அபராதம், நீதிமன்றத்தின் மூலம் வழக்குத் தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
   இந்தக் காய்ச்சல் கண்டுபிடிப்பு முகாம்கள், சிறப்பு துப்புரவுப் பணிகள் மூலமாக, ஏடிஸ் கொசுக்களை முற்றிலுமாக அழித்து நாமக்கல் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.
   சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கோ.ரமேஷ்குமார், பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai