சுடச்சுட

    

    பாதுகாப்பு வழங்கக் கோரி நாமக்கல் லாரி உரிமையாளர்கள் நாளை உண்ணாவிரதப் போராட்டம்

    By நாமக்கல்,  |   Published on : 21st September 2016 10:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடந்த 10 நாள்களாக தமிழக எல்லையில் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் லாரி உரிமையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பல கோடி ரூபாய் இழப்பைப் போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாமக்கல்லில் வியாழக்கிழமை லாரி உரிமையாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
     இதுகுறித்து நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஆர்.வாங்கிலி செய்தியாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:
     காவிரி பிரச்னையில் கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்ட கலவரத்தால் லாரி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், கர்நாடக வாகனங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. அதேபோல் கர்நாடகத்தில் தமிழக வாகனங்களைப் பாதுகாப்புடன் இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
     கடந்த 10 நாள்களாக லாரிகள் தமிழக எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளதால் லாரி உரிமையாளர்களுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஓட்டுநர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர். மாநில எல்லையில் 1,000 வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதைப் போக்க தமிழக அரசு, மத்திய அரசிடம் பேசி தமிழக லாரிகளைப் பாதுகாப்புடன் கர்நாடகத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
     இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர் சங்கம் சார்பில், நாமக்கல் சங்க அலுவலகத்தில் வரும் வியாழக்கிழமை (செப்.22) உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.
     இந்தப் போராட்டத்துக்கு டிரெய்லர் லாரி, டேங்கர் லாரி உரிமையாளர்கள், லாரி தொழில் சார்ந்த இதர சங்கங்களும் ஆதரவு அளிக்கின்றன என்றார்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai