சுடச்சுட

    

    ராசிபுரம் தொகுதியில் ரூ. 5.10 கோடியில் பல்வேறு திட்டப் பணிகள் தொடக்கம்

    By ராசிபுரம்,  |   Published on : 21st September 2016 08:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராசிபுரம் தொகுதிக்குள்பட்ட ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, வெண்ணந்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட பல்வேறு பகுதியில் ரூ. 5.10 கோடி மதிப்பிலான அரசுத் திட்டப் பணிகளுக்கான பூமிபூஜை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இப்பணிகளை நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் பங்கேற்று பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.
     ஆர்.பட்டணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ. 1 கோடியே 87 லட்சம் மதிப்பில் 10 வகுப்பறைக் கட்டடம், அறிவியல் ஆய்வகம், இதேபோல் நெ.3 ஆர்.கொமாரபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ. 1 கோடியே 32 லட்சம் மதிப்பிலான 10 வகுப்பறைக் கட்டடம், அறிவியல் ஆய்வகம், நாமகிரிப்பேட்டை ஒன்றியப் பகுதியான மத்துருட்டு ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் ரூ. 1.09 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை அமைத்தல், சிங்கிலியன்கோம்பை கட்டைக்காடு பகுதியில் ரூ. 29.80 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை அமைத்தல், ஈஸ்வரமூர்த்திபாளையம் ஊராட்சி ஆத்தூர் சாலையில் ரூ. 19.14 லட்சம் தார்ச்சாலை அமைத்தல், ஆயில்பட்டி ஊராட்சி கரலாக்காடு பேருந்து நிறுத்தம் பகுதியில் ரூ. 27.33 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை, கார்கூடல்பட்டி குட்டைக்காடு பகுதியில் தார்ச்சாலை பணிகள், முள்ளுக்குறிச்சி தும்பல்பட்டி ரோடு பெரியகோம்பை பிரிவில் ரூ. 29.90 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை அமைத்தல், மூலக்குறிச்சி ஊராட்சி பெரியக்குறிச்சி பகுதியில் ரூ. 27.20 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை அமைத்தல், ஊனாந்தாங்கல் ஊராட்சி பகுதியில் ரூ. 19.14 லட்சம் மதிப்பில் தார் அமைத்தல் போன்ற பணிகளுக்கு பூமிபூஜை செய்து அடிக்கல் நட்டு வைக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.
     விழாவில் நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் இ.கே.பொன்னுசாமி, ராசிபுரம் நகர்மன்றத் தலைவர் எம்.பாலசுப்பிரமணியம், ராசிபுரம் "அட்மா' திட்டத் தலைவர் எஸ்.காளியப்பன், ஆர்.சி.எம்.எஸ். தலைவர் எஸ்.பி.தாமோதரன், உறுப்பினர் வடுகம் பாலன், வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ஆர்.தமிழ்ச்செல்வி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் கே.சந்திரசேகரன், கே.கலாவதி, திம்மநாயக்கன்பட்டி ஊராட்சித் தலைவர் டி.எம்.ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     உயர் மின் கோபுரவிளக்கு: இதேபோல் நாடாளுமன்ற உறுப்
     பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து திம்மநாயக்கன்பட்டி, குருசாமிபாளையம் பாவடி, வெள்ளைபிள்ளையார்கோவில், சேந்தமங்கலம் பிரிவு, காக்காவேரி, ஆட்டையாம்பட்டி பிரிவு ஆகிய 6 இடங்களில் ரூ.36.50 லட்சம் மதிப்பில் உயர் மின்கோபுர விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விளக்கு பயன்பாட்டை பி.ஆர்.சுந்தரம் எம்பி., தொடங்கி வைத்தார்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai