சுடச்சுட

    

    அறிவிக்கப்படாத மின் வெட்டு: பொதுமக்கள் பாதிப்பு

    By பரமத்தி வேலூர்,  |   Published on : 22nd September 2016 09:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமத்தி வேலூர் பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுவதால், வர்த்தக நிறுவனத்தினர், பொதுமக்கள் உள்ளிட்டோர் பெரிதும் பாதிப்படைகின்றனர்.
     ஒவ்வொரு மாதமும் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக மின்நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் குறித்து நாளிதழ்களில் அறிவிப்பு வெளியாவதைத் தொடர்ந்து பொதுமக்களும், வர்த்தக நிறுவனத்தினரும் தங்களது வழக்கமான பணிகளை முதல் நாளே திட்டமிட்டுக்கொள்வர்.
     ஆனால், புதன்கிழமை மின் நிறுத்தம் குறித்து நாளிதழ்களுக்கு தகவல் ஏதும் மின்சாரத் துறையினர் தெரிவிக்கவில்லை. இதனால் மின் நிறுத்தம் செய்யப்படுவது பொதுமக்களுக்கும், வர்த்தக நிறுவனத்தினருக்கும் தெரியாமல் போனது. இதனால் கிராமப் புறங்களில் இருந்து வருவோர் தங்களது ஆதார் அட்டையை நகல் எடுப்பது, பத்திரப் பதிவுக்கு நகல் எடுப்பது, வேலைவாய்ப்பு பதிவு செய்வோர் உள்ளிட்ட இ-சேவைகளை வழக்கம் போல் செய்ய முடியாமல் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.
     இதனால், தங்களது அன்றாட பணிகள் பாதிக்கப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர். எனவே, மின்சார வாரியத்தினர் மின் நிறுத்தம் குறித்து முன் கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கேட்டுக் கொண்டனர்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai