Enable Javscript for better performance
ஜனவரியில் கள் இறக்கும் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    நிகழாண்டில் கள்ளுக்கான தடையை நீக்காவிட்டால், தமிழகத்தில் 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் கள் இறக்கும் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்புச் செயலர் செ.நல்லசாமி தெரிவித்தார்.
     நாமக்கல்லில் அவர் செய்தியாளர்களுக்கு புதன்கிழமை அளித்த பேட்டி: மத்திய அரசு 4 வாரத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து நீர்ப் பங்கீட்டை ஒழுங்குப்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்ற உத்தரவிட்டதை வரவேற்கிறேன்.
     காவிரி ஆற்றில் அன்றாடம் வரும் நீரினை பங்கீடு செய்து கர்நாடக மாநிலத்துக்குரிய தண்ணீரை ஹேமாவதி, கபினி, கே.ஆர்.எஸ். அணைகளிலும், தமிழகத்துக்கு வழங்கக் கூடிய தண்ணீரை மேட்டூர் அணையிலும் தேக்கினால் இருமாநிலத்துக்கும் எவ்வித பிரச்னையும் வராது. அமைக்கப்படவுள்ள காவேரி மேலாண்மை வாரியம் மூலம் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை சம்பா சாகுபடிக்கு பெற்றுத்தர வேண்டும்.
     கள்ளுக்கு விதிக்கப்பட்ட தடையை நிகழாண்டில் தமிழக அரசு நீக்காவிட்டால், வரும் ஜனவரி மாதத்தில் தமிழகத்தில் கள் இறக்கும் போராட்டம் நடத்தப்படும். அரசு மதுவிலக்கு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தால், அரசியல் அமைப்புச் சட்டத்தின் படி நீதிமன்றத்தை நாடுவோம் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai