சுடச்சுட

  

  தேமுதிக சார்பில் உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்ப மனு விநியோகம்

  By நாமக்கல்,  |   Published on : 22nd September 2016 09:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

   நாமக்கல் மாவட்ட தேமுதிக அலுவலகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்ப மனு படிவம் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை தொடங்கியது.
   மாவட்டப் பொறுப்பாளர்கள் விஜயன் மற்றும் விஜய்சரவணன் தலைமை வகித்தனர். மாநில துணைச் செயலரும், தேர்தல் பொறுப்பாளருமான ராஜா சந்திரசேகர் முன்னிலை வகித்து படிவங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பலரும் பங்கேற்று விண்ணப்பப் படிவங்களை பெற்றுக் கொண்டனர். விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து வரும் 30-ஆம் தேதி வரை வழங்கலாம் என ராஜா சந்திரசேகர் தெரிவித்தார்.
   தலைமை செயற்குழு உறுப்பினர் பூபதி, மாவட்ட வழக்குரைஞர் அணி செயலர் ராஜ்குமார், மகளிரணி செயலர் செல்வி, நகரச் செயலர் வெங்கடாசலம், இளைஞரணி துணைச் செயலர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai