சுடச்சுட

    

    நாமகிரிப்பேட்டையில் ரூ.20 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்

    By ராசிபுரம்,  |   Published on : 22nd September 2016 09:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமகிரிப்பேட்டை கூட்டுறவு ஏல மையத்தில் நடைபெற்ற மஞ்சள் ஏலத்தில், ரூ.20 லட்சம் மதிப்பிலான மஞ்சள் வர்த்தகம் நடைபெற்றது.
     ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் நாமகிரிப்பேட்டை ஏல மையத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை விரலி, உருண்டை, பனங்காளி ரக மஞ்சள் ஏலம் நடைபெறும். இதில் சுற்று வட்டாரப் பகுதி மஞ்சள் விவசாயிகள், வியாபாரிகள் மஞ்சளை ஏலத்துக்கு கொண்டு வந்து பங்கேற்பர்.
     இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் விரலி ரகம் 350 மூட்டை, உருண்டை ரகம் 95 மூட்டை, பனங்காலி ரகம் 2 மூட்டை கொண்டுவரப்பட்டன. இதில் விரலி ரகம் அதிகபட்சமாக ரூ.9,042-க்கும், குறைந்தபட்சமாக ரூ.8,042-க்கும் விற்பனையானது. உருண்டை ரகம் அதிகபட்சமாக ரூ.8,322-க்கும், குறைந்தபட்சமாக ரூ.7,012-க்கும் தரத்துக்கேற்றவாறு விற்பனையானது. பனங்காலி ரகம் அதிகபட்சமாக ரூ.19,315-க்கும், குறைந்தபட்சமாக ரூ.18,312-க்கும் விற்பனையானது. இதில் மொத்தம் ரூ.20 லட்சத்துக்கு வர்ததகம் நடைபெற்றது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai