"நாமக்கல்-திருச்சி நான்கு வழி சாலைப் பணியைத் தொடங்க வேண்டும்'
By நாமக்கல், | Published on : 22nd September 2016 09:37 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
நாமக்கல்-திருச்சி நான்கு வழி சாலைப் பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் 26-ஆவது மகா சபைக் கூட்டம், சங்கத் தலைவர் நடராஜன் தலைமையில் நாமக்கல்லில் புதன்கிழமை நடைபெற்றது. நாமக்கல் எம்.பி. பி.ஆர்.சுந்தரம், எம்.எல்.ஏ. கே.பி.பி.பாஸ்கர், தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் எம்.ஆர்.குமாரசாமி, டிரெய்லர் லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் சுந்தர்ராஜன், நாமக்கல் ஆட்டோ நகர் தலைவர் (பொறுப்பு) பழனிசாமி ஆகியோர் வாழ்த்தி பேசினார்.
புதிய நிர்வாகிகளுக்கு நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஆர்.வாங்கிலி, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தலைவராக எம்.பொன்னம்பலம், உப தலைவராக எம்.தங்கவேல், துணைத் தலைவராக எஸ்.செந்தில்குமார், செயலராக என்.ஆர்.கார்த்திக், இணைச் செயலராக எஸ்.கணேசன், துணைச் செயலராக எஸ்.மாதேஸ்வரன், பொருளராக பி.கணபதி ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: நாமக்கல் நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்திடும் வகையில், வட்டச் சாலையை விரைந்து அமைக்க வேண்டும். சேலம்-சென்னை எழும்பூர் விரைவு ரயிலை நாமக்கல்லில் இருந்து செல்லுமாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். லாரி, டிரெய்லர், எல்.பி.ஜி. வாகனங்கள் நிறுத்துவதற்கு நாமக்கல்லில் வாகன நிறுத்தம் அமைக்க வேண்டும். நாமக்கல்-திருச்சி சாலையில் போக்குவரத்து அதிகரித்துள்ளதால், அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. அதனால், நாமக்கல்லில் இருந்து திருச்சி வரை நான்கு வழிச்சாலையை ஏற்படுத்த வேண்டும்.