சுடச்சுட

    

    நூதன திருட்டு: பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுகோள்

    By நாமக்கல்,  |   Published on : 22nd September 2016 09:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நூதன முறையில் நடைபெறும் திருட்டுகளைத் தடுக்க, பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
     இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி: அடையாளம் தெரியாத இரண்டு அல்லது மூன்று நபர்கள் மோட்டர் சைக்கிள்களில் வந்து கொலுசுகளை வாங்கி பாலீஷ் போட்டுத் தருவதாக கூறி, அவற்றை குக்கரில் சிகப்பு பவுடர் கலந்து சூடு செய்து பளபளப்பாக மாற்றித் தருவர்.
     பிறகு, தங்க நகைகளைக் கொடுத்தால் அவற்றையும் பளபளப்பாக மாற்றித் தருவதாக கூறி நகைகளை வாங்கி குக்கரில் மஞ்சள் கலர் போட்டு சூடு பண்ணுவது போல் செய்து கையை விட்டு கலக்கும் போது நகைகளை எடுத்துக்கொண்டு, கவனத்தை திசைதிருப்பி குக்கரை மூடி 15 நிமிடத்துக்கு பிறகு குக்கரை திறந்து பாருங்கள் நகைகள் பளபளப்பாக இருக்கும் என கூறிவிட்டு சென்று விடுவர்.
     பிறகு குக்கரை திறந்து பார்க்கும் போது, நகைகள் இருக்காது. இதுபோன்ற நபர்கள் வந்து கேட்டால் நகைகளை கழற்றிக் கொடுத்து ஏமாற வேண்டாம். மேலும், சந்தேகம் படும்படி நபர்கள் வந்தால் பொதுமக்கள் பிடித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு 04286-280500, 281000 என்ற தொலைபேசி எண் அல்லது 9498101020 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கு தெரிவிக்கலாம்.
     அறிமுகம் இல்லாதவர்கள் வீடுகளுக்கு வந்து தண்ணீர் கேட்டால் வீட்டைத் திறந்து வைத்து விட்டு உள்ளே செல்ல வேண்டாம். மேலும், கணவர் மற்றும் குழந்தைகள் ஏதாவது விபத்தில் சிக்கிக்கொண்டதாகவோ, உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவோ கூறி யாராவது அழைத்தால் உடன் செல்ல வேண்டாம்.
     நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் இருந்து பணம், நகைகளை பெற்றுக் கொண்டு வரும்போது, சில்லரைக் காசுகளையோ, ரூபாய் நோட்டுகளையோ கீழே வீசி அது தங்களுடையதுதானா எனக்கேட்டோ அல்லது உடையில் கறை மற்றும் எச்சம் இருப்பதாக கூறி கவனத்தை திசைதிருப்பி பணம் மற்றும் நகைகளைப் பறித்துச் செல்ல வாய்ப்புள்ளதால் விழிப்புடன் இருக்க வேண்டும்.
     வங்கிகளில் இருந்து பேசுவதாகவும், உங்களுடைய வங்கி ஏ.டி.எம். கார்டு காலாவதியாகிவிட்டது என கூறியும், புதிய ஏ.டி.எம். கார்டு பெற வங்கிக் கணக்கு எண் மற்றும் ஏ.டி.எம். ரகசியக் குறியீட்டு எண்ணை யாராவது தொலைபேசி மூலம் கேட்டால் கொடுத்து ஏமாற வேண்டாம் என அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai