சுடச்சுட

    

    மண்பாண்டத் தொழிலாளருக்கு மின் சக்கரம்: கொங்கு குலாளர் சங்கம் நன்றி

    By நாமக்கல்,  |   Published on : 22nd September 2016 09:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு ரூ.4 கோடி மதிப்பில் மின் சக்கரம் வழங்கப்படும் என அறிவித்த தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு கொங்கு குலாளர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
     சங்க மாநிலத் தலைவர் குமரேசன் வெளியிட்ட அறிக்கை: மண்பாண்டத் தொழிலை ஊக்குவிக்கும் வகையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் மண்பாண்டம் தயாரிக்க 2,000 தொழிலாளர்களுக்கு ரூ.4 கோடி மதிப்பில் விலையில்லா மின் சக்கரம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
     மேலும், மண்பாண்டம் தயாரிக்க தொழில்கூடங்கள் அமைக்க மானியம் வழங்கவும், இந்த ஆண்டு ரூ.2 கோடி செலவில் கதர் மற்றும் தொழில் வாரியத்தின் கீழ் செயல்படும் மண்பாண்டத் தொழில் கூட்டுறவு சங்கங்களின் பழுதடைந்த பணிக்கூடங்களை சீர் செய்தல், புதிய பணியிடங்கள் கட்டுதல் ஆகிய பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்.
     கண்காட்சி மற்றும் கைவினைப் பொருள் சந்தை நடத்துதல், 10 ஆயிரம் கைவினைஞர்களுக்கு தலா ரூ.5,000 மதிப்பில் விலையில்லா உபகரணப் பெட்டி வழங்கும் திட்டத்தில் மத்திய அரசு ரூ.17.14 கோடி, மாநில அரசு ரூ.3.24 கோடி தொகையை தமிழக கைத்திறன் வளர்ச்சிக் கழகத்துக்கு இணை மானியமாக வழங்குகிறது. இதுபோன்று பல்வேறு உதவிகளை செய்து மண்பாண்டத் தொழில் செய்யும் குலாளர் சமுதாயத்தின் வாழ்க்கை வளம் பெற செய்த முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai