சுடச்சுட

    

    பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியப் பகுதியில் ரூ.2.47 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி தொடக்கி வைத்தார்.

     நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பாதரை, தட்டாங்குட்டை, எலந்தகுட்டை, பள்ளிபாளையம் அக்ரஹாரம், புதுப்பாளையம் அக்ரஹாரம், கொக்கராயன்பேட்டை மற்றும் காடச்சநல்லூர் ஆகிய ஊராட்சிகளில் புதிய திட்டப் பணிகள் தொடக்க விழா, கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டடங்களின் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
     மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத் துறை அமைச்சர் பி.தங்கமணி தலைமையேற்று சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதி, தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்ட நிதி, ஊராட்சி ஒன்றிய பொது நிதி ஆகிய நிதிகளின் மூலம் ரூ.54.98 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட 5 புதிய கட்டடங்கள் மற்றும் புதிய தார்ச் சாலையினை திறந்து வைத்தும், ரூ.2,47 கோடி மதிப்பீட்டிலான புதிய சாலை மேம்பாட்டுப் பணிகள், பொது சுகாதார வளாகங்கள் உள்ளிட்ட புதிய திட்டப் பணிகளை தொடங்கியும் வைத்தார்.
     விழாக்களுக்கு பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் எஸ்.செந்தில் முன்னிலை வகித்தார். பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இ.சிவராமகிருஷ்ணராஜ், டி.எஸ்.பாலமுருகன், உதவி பொறியாளர்கள் மெகபூப் பாஷா, சங்கர், பள்ளிபாளையம் நகர்மன்ற துணைத் தலைவர் டி.கே.சுப்பிரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai