சுடச்சுட

    

    பரமத்திவேலூர் வெங்கமேட்டில் உள்ள சேலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் கொப்பரைத் தேங்காய் அதிக விலைக்கு ஏலம் போனது.
     பரமத்திவேலூர் வட்டத்துக்குள்பட்ட பல்வேறு இடங்களில் இருந்து கொப்பரைத் தேங்காய் மூட்டைகள் பரமத்திவேலூர் வெங்கமேடுக்குக் கொண்டு வரப்படுகிறது. இங்கு வாரந்தோறும் வியாழக்கிழமை கொப்பரைத் தேங்காய் ஏலம் நடைபெறுகிறது. கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 2,761 கிலோ கொப்பரைத் தேங்காய் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் ஒரு கிலோ அதிகபட்சமாக ரூ.59.19-க்கும், குறைந்தபட்சமாக ரூ.56.79-க்கும், சராசரியாக ரூ.59.19-க்கும் ஏலம் போனது.
     நிகழ்வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு திருச்செங்கோடு, ஈரோடு, சிவகிரி, கொடுமுடி, வெள்ளக்கோவில் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான வியாபாரிகள் வந்திருந்தனர். ஏலத்துக்கு 2,326 கிலோ கொப்பரைத் தேங்காய் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் கிலோ ஒன்று அதிகபட்சமாக ரூ.62.76-க்கும், குறைந்தபட்சமாக ரூ.58.89-க்கும், சராசரியாக ரூ.61.21-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்து 312-க்கு வர்த்தகம் நடைபெற்றது. கடந்த வாரத்தை விட நிகழ் வாரம் கொப்பரைத் தேங்காயின் வரத்துக் குறைந்திருந்ததால் விலை உயர்ந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai