Enable Javscript for better performance
ஜேடர்பாளையம் படுகையணையை வந்தடைந்த காவிரி நீர்: விவசாயிகள் உற்சாகம்- Dinamani

சுடச்சுட

    

    ஜேடர்பாளையம் படுகையணையை வந்தடைந்த காவிரி நீர்: விவசாயிகள் உற்சாகம்

    By பரமத்தி வேலூர்,  |   Published on : 23rd September 2016 08:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட காவிரி நீர், பரமத்திவேலூர் அருகே ஜேடர்பாளையம் படுகையணைக்கு புதன்கிழமை மாலை முழுமையாக வந்தடைந்தது. இதனால், விவசாயிகள் உற்சாகம் அடைந்தனர்.
     சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து முதற்கட்டமாக வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி நீர், முதல் பாசனத்துக்காக செவ்வாய்க்கிழமை காலை திறந்துவிடப்பட்டது. அணையிலிருந்து படிப்படியாக 12 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்
     பட்டுள்ளது.
     அணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர், ஜேடர்பாளையம் படுகை அணைக்கு புதன்கிழமை வந்தது. காலை 6 மணிக்கு 7 ஆயிரம் கன அடியும், இரவு முழுமையாக 11 ஆயிரத்து 706 கனஅடியும் நீர் வரத்து இருந்தது.
     இதனால், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள கரும்பு, வாழை, நெல், வெற்றிலை, கோரை, மஞ்சள் உள்ளிட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். இதனால் விவசாயிகள் உற்சாகமடைந்துள்ளனர்.
     மேலும் பரமத்திவேலூர் காவிரி கரையோரப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டமும் உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai