சுடச்சுட

  

  திருக்குறளைப் படியுங்கள் வாழ்க்கை வசப்படும்: கவிஞர் கவிதாசன் பேச்சு

  By குமாரபாளையம்,  |   Published on : 23rd September 2016 09:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தினமும் திருக்குறளை படித்து வந்தால் வாழ்க்கை வசப்படும் என கல்லூரி மாணவர்களுக்கு கவிஞர் கவிதாசன் அறிவுறுத்தினார்.
   குமாரபாளையம் எஸ்எஸ்எம் கலை அறிவியல் கல்லூரியும், குறள் மலைச் சங்கமும் இணைந்து நடத்திய திருக்குறள் கல்வெட்டுகள் குறித்த கருத்தரங்கம் கல்லூரித் தலைவர் எம்.எஸ்.மதிவாணன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
   இயக்குநர் கே.ராமசாமி முன்னிலை வகித்தார். சங்கத்தின் நிறுவனர் பா.ரவிக்குமார் வரவேற்றார். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கவிஞர் கவிதாசன் பேசியதாவது:
   வாழ்வில் உயர்வை அடைவதற்கு தன்னம்பிக்கை, குறிக்கோள், திறமையுடன் செயல்பட வேண்டும். தினமும் ஒரு குறளை வாசித்து, அதனைப் பின்பற்றுங்கள், பாரதியார், பாரதிதாசனின் கவிதைகளை நேசியுங்கள். வாழ்க்கை வசப்படும் என்றார்.
   விழாவில், கல்வெட்டில் திருக்குறள் பாகம் 3 எனும் ஆய்வுப் புத்தகம் வெளியிடப்பட்டது. கல்வெட்டுக் குழு நிர்வாகிகள் கணேசன், பேச்சிமுத்து, முதல்வர் கே.காமராஜ், முனைவர் அ.வெற்றிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai