சுடச்சுட

  

  5 ஆண்டுகளில் 7.72 லட்சம் பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி: அமைச்சர் வி.சரோஜா

  By நாமக்கல்,  |   Published on : 23rd September 2016 08:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 7,72,643 பயனாளிகளுக்கு ரூ.2,537.74 கோடி மதிப்பீட்டில் திருமண நிதியுதவி, ரூ.786.64 கோடி மதிப்பீட்டில் 2,843.50 கிலோ தங்கம் வழங்கப்பட்டுள்ளது என்றார் சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர் வி.சரோஜா.
   ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மு.ஆசியா மரியம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. நாமக்கல் எம்பி பி.ஆர்.சுந்தரம், எம்எல்ஏக்கள் கே.பி.பி.பாஸ்கர், சி.சந்திரசேகரன் முன்னிலை வகித்தனர்.
   விழாவில் சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் வி.சரோஜா பங்கேற்று ஏழைப்பெண்களுக்கு திருமண நிதி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கிப் பேசியது:
   திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கடந்த 2011-12ஆம் நிதியாண்டு முதல் 2015-16 ஆம் நிதியாண்டு வரை கடந்த 5 ஆண்டுகளில் பட்டதாரி அல்லாதோர் 4,64,541 பயனாளிகளும், பட்டம் அல்லது பட்டயம் படித்த 2,46,336 பயனாளிகள் என மொத்தம் 7,72,643 பயனாளிகளுக்கு ரூ.2537.74 கோடி திருமண நிதியுதவி, 2843.50 கிலோ தங்கம் வழங்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 15,494 பயனாளிகளுக்கு ரூ.57.78 கோடி திருமண நிதியுதவி, 61.976 கிலோ தங்கம் வழங்கப்பட்டுள்ளது.
   இதுபோல எண்ணற்ற திட்டங்களை தமிழக மக்களுக்காக முதல்வர் நிறைவேற்றி வருகிறார். பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கின்ற வகையில் உள்ளாட்சிகளில் 50 சதவிகித இடஒதுக்கீடு வழங்கிட உத்தரவிட்டுள்ளார் என்றார்.
   மாவட்ட சமூக நல அலுவலர் ரா.அன்பு வரவேற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் கு.பழனிச்சாமி, சேலம் ஆவின் தலைவர் சின்னுசாமி, முன்னாள் எம்பி எஸ்.அன்பழகன், முன்னாள் எம்எல்ஏவும் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினருமான கே.கலாவதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai