சுடச்சுட

  

  சாதிச் சான்றிதழ் வழங்காவிட்டால் உள்ளாட்சித் தேர்தல் புறக்கணிப்பு: பண்டி, கொட்டா சமூகத்தினர் அறிவிப்பு

  By நாமக்கல்,  |   Published on : 24th September 2016 08:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சாதிச் சான்றிதழ் வழங்காவிட்டால் உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிப்போம் என பண்டி, கொட்டா சமூகத்தினர் அறிவித்துள்ளனர்.
   பண்டி மற்றும் கொட்டா சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் சங்கத் தலைவர் ஈஸ்வரன் தலைமையில் நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
   நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: பண்டி, கொட்டா சாதிச் சான்றிதழை வட்டாட்சியர் அலுவலகத்தை அணுகி கேட்பது, வட்டாட்சியர் வழங்க மறுக்கும் பட்சத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்துவது, சாதிச்சான்றிதழ் உரிய அலுவலர்கள் மூலம் கிடைக்காத பட்சத்தில் வருகிற உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிப்பது, மேலும் பண்டி, கொட்டா சாதிச் சான்றிதழ் வழங்க வலியுறுத்தி வரும் அக்டோபர் 3-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது, கல், மண் வேலை செய்யும் பண்டி, கொட்டா இன மக்களுக்கு இலவச தொழில் கருவிகள் வழங்க வேண்டுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
   கூட்டத்தில் சங்கச் செயலர் ஞானதண்டாயுதபாணி, பொருளாளர் பெரியசாமி, துணைத் தலைவர் செல்வராஜ், கெüரவத் தலைவர் ஜெ.பால், நிர்வாகக் குழு உறுப்பினர் கலியபெருமாள், அமைப்புச் செயலர் காளியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai