Enable Javscript for better performance
நவீன எரிவாயு தகன மேடை: செயல்பாட்டுக்கு வருவது எப்போது?- Dinamani

சுடச்சுட

    

    நவீன எரிவாயு தகன மேடை: செயல்பாட்டுக்கு வருவது எப்போது?

    By பரமத்தி வேலூர்,  |   Published on : 24th September 2016 08:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமத்தி வேலூர் காசி விஸ்வநாதர் கோயில் காவிரி கரையோரம் கட்டப்பட்டு வரும் எரிவாயு தகன மேடை கட்டடத்தை விரைந்து கட்டி முடித்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
     பரமத்திவேலூர் காவிரி கரையில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு எதிர்புறம் நவீன எரிவாயு தகன மேடை கட்டப்பட்டு வருகிறது. இதற்கு, கபிலர்மலை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக இருந்த டாக்டர் கே.நெடுஞ்செழியனின் 2010-2011-ஆம் ஆண்டு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 50 லட்சமும், வேலூர் பேரூராட்சி 2015-2016 பொது நிதியிலிருந்து ரூ. 25 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
     கடந்த ஆண்டு ஜூலை மாதம் 25-ஆம் தேதி இதற்கான பூமிபூஜை நடைபெற்று பணிகள் தொடங்கின. அப்போதைய தொழில்துறை அமைச்சர் தங்கமணி அடிக்கல் நாட்டினார்.
     கட்டுமானப் பணிகள் தொடங்கி ஓர் ஆண்டுக்கு மேல் ஆகியும் இதுவரை முழுமையாகப் பணிகள் முடியவில்லை. இந்தப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai