சுடச்சுட

  

  நாமக்கல் மாவட்டத்தில் 5 நகராட்சிகளின் வார்டு இட ஒதுக்கீடு விவரம் வெளியீடு

  By நாமக்கல்,  |   Published on : 24th September 2016 08:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம், குமாரபாளையம், பள்ளிபாளையம் ஆகிய 5 நகராட்சிகள் உள்ளன. இந்த 5 நகராட்சிகளிலும் எஸ்சி பொது, எஸ்சி பெண், பொது பெண் வார்டுகள் குறித்த இட ஒதுக்கீடு விவரம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
   உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நகராட்சித் தலைவர் பதவிக்கான இட ஒதுக்கீடு விவரம் அண்மையில் வெளியான நிலையில் இப்போது, நகராட்சிகளின் வார்டு வாரியாக இட ஒதுக்கீடு விவரம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
   நாமக்கல்: இந்நகராட்சியில் மொத்தம் 39 வார்டுகள் உள்ளன. இதில் எஸ்சி பொதுப்பிரிவுக்கு 37, 22, 39 ஆகிய வார்டுகளும், எஸ்சி பெண் பிரிவுக்கு 12, 23, 33, 21 ஆகிய வார்டுகளும், பெண்கள் பொதுப்பிரிவுக்கு 30,17, 28,13, 8, 3, 27, 1, 19, 9, 25, 26, 34, 24, 31, 36 ஆகிய வார்டுகளும், எஞ்சிய 16 வார்டுகள் பொதுப்பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
   திருச்செங்கோடு : நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இதில் எஸ்சி பொதுப்பிரிவுக்கு 30, 11-ஆவது வார்டுகளும், எஸ்சி பெண் பிரிவுக்கு 31, 3-ஆவது வார்டுகளும், பெண்கள் பொதுப்பிரிவுக்கு 5, 6, 9, 14, 17, 18, 19, 27, 32, 33, 7, 26, 13, 10, 29 ஆகிய வார்டுகளும், எஞ்சிய 14 வார்டுகள் பொதுப்பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
   ராசிபுரம் : நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இதில் எஸ்சி பொதுப்பிரிவுக்கு 25-ஆவது வார்டும், எஸ்சி பெண் பிரிவுக்கு 1, 6-ஆவது வார்டுகளும், பெண்கள் பொதுப்பிரிவுக்கு 2, 4, 7, 11, 13, 16, 19, 21, 22, 24, 26, 27 ஆகிய வார்டுகளும், எஞ்சிய 12 வார்டுகள் பொதுப்பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
   குமாரபாளையம்: நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இதில் எஸ்சி பெண் பிரிவுக்கு 28-ஆவது வார்டும், பெண் பொதுப்பிரிவுக்கு 6, 8, 9, 10, 15, 16, 20, 21, 23, 25, 26, 29, 30, 31, 32, 33 ஆகிய வார்டுகளும், எஞ்சிய 16 வார்டுகள் பொதுப்பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
   பள்ளிபாளையம் : நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. எஸ்சி பெண் பிரிவுக்கு 10-வது வார்டும், பெண் பொதுப்பிரிவுக்கு 3, 4, 9, 12, 14, 15, 16, 17, 18, 19 ஆகிய வார்டுகளும், எஞ்சிய 10 வார்டுகள் பொதுப்பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. தலைவர் பதவியை பொறுத்தவரை நாமக்கல், திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம் நகராட்சிகள் பொதுப்பிரிவுக்கும், ராசிபுரம் நகராட்சி பெண் பொதுப்பிரிவுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசிதழில் அண்மையில் வெளியிடப்பட்டது.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai