Enable Javscript for better performance
பரமத்திவேலூரில் வாக்காளர் பட்டியல் விழிப்புணர்வுப் பேரணி- Dinamani

சுடச்சுட

    

    பரமத்திவேலூரில் வாக்காளர் பட்டியல் விழிப்புணர்வுப் பேரணி

    By பரமத்தி வேலூர்,  |   Published on : 24th September 2016 08:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் குறித்த விழிப்புணர்வுப் பேரணி பரமத்திவேலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
     பேரணியை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலர் ராமகிருஷ்ணன் கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.
     பரமத்திவேலூர் வட்டாட்சியர் விஜயலட்சுமி, தேர்தல் துணை வட்டாட்சியர் தங்கம், மாவட்டத் தேர்தல் பிரிவு ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ்கண்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
     பஞ்சமுக விநாயகர் கோயில் முன் தொடங்கிய பேரணி பரமத்திவேலூரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் கோயிலை அடைந்தது. பேரணியில் மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்றதோடு துண்டுப் பிரசுரங்களும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. பி.ஜி.பி கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai