Enable Javscript for better performance
மாவட்ட ஊராட்சித் தலைவர் போட்டிக்கு கடிவாளம் போட்ட இட ஒதுக்கீடு: 3 கவுன்சிலர்கள் இடையேதான் போட்டி- Dinamani

சுடச்சுட

    

    மாவட்ட ஊராட்சித் தலைவர் போட்டிக்கு கடிவாளம் போட்ட இட ஒதுக்கீடு: 3 கவுன்சிலர்கள் இடையேதான் போட்டி

    By நாமக்கல்,  |   Published on : 24th September 2016 08:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவி எஸ்.சி பெண் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் இதற்கென உள்ள 3 வார்டுகளில் இருந்து தேர்வாகும் ஒரு பெண் கவுன்சிலரே தலைவராகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பலத்த போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
     நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், மோகனூர், பரமத்தி, கபிலர்மலை, வெண்ணந்தூர், புதுச்சத்திரம், சேந்தமங்கலம், எருமபட்டி, கொல்லிமலை, ராசிபுரம், புதுச்சத்திரம், மல்லசமுத்திரம், எலச்சிப்பாளையம், திருச்செங்கோடு, பள்ளிபாளையம் ஆகிய 15 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இந்த 15 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 17 மாவட்ட ஊராட்சி வார்டுகள் உள்ளன. 50 ஆயிரம் மக்கள் தொகை அளவுக்கு கிராம ஊராட்சிகளை ஒருங்கிணைந்து ஒரு மாவட்ட ஊராட்சி வார்டு கணக்கிடப்படுகிறது. வரும் அக்டோபர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாவட்ட ஊராட்சியில் உள்ள 17 வார்டுகளுக்கும் எஸ்.சி. பெண், எஸ்சி பொது, பொது பெண் மற்றும் பொதுப்பிரிவு வார்டுகளுக்கான இட ஒதுக்கீடு விவரம் அரசிதழில் வெளியாகி உள்ளது.
     இதன்படி நாமக்கல் மாவட்ட ஊராட்சியில் 17 வார்டுகளுக்கான இட ஒதுக்கீடு விவரம்: பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தை உள்ளடக்கிய 1 மற்றும் 2 வது வார்டுகள் பொதுப்பிரிவுக்கும், திருச்செங்கோடு, எலச்சிப்பாளையம் ஊராட்சி ஒன்றியங்களை உள்ளடக்கிய 3வது வார்டு எஸ்சி பொதுப் பிரிவுக்கும், எலச்சிப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தை உள்ளடக்கிய 4-ஆவது வார்டு பெண் பொதுப்பிரிவுக்கும், மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்தை உள்ளடக்கிய 5-ஆவது வார்டு எஸ்சி பெண் பிரிவுக்கும், வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்தை உள்ளடக்கிய 6-ஆவது வார்டு பொது பெண் பிரிவுக்கும், ராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்தை உள்ளடக்கிய 7வது வார்டு எஸ்சி பெண் பிரிவுக்கும், நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 8-ஆவது வார்டு பொது பெண் பிரிவுக்கும், கொல்லிமலை, எருமபட்டி ஊராட்சி ஒன்றியங்களை உள்ளடக்கிய 9-ஆவது வார்டு எஸ்டி பொது பிரிவுக்கும், சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தை உள்ளடக்கிய 10-ஆவது வார்டு பொது பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
     புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தை உள்ளடக்கிய 11-ஆவது வார்டு, நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்தை உள்ளடக்கிய 12-ஆவது வார்டு ஆகியவை பொது பெண் பிரிவுக்கும், பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தை உள்ளடக்கிய 13-ஆவது வார்டு பொது பிரிவுக்கும், கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்தை உள்ளடக்கிய 14-ஆவது வார்டு பொது பெண் பிரிவுக்கும், மோகனூர் ஊராட்சி ஒன்றியத்தை உள்ளடக்கிய 15-ஆவது வார்டு, நாமக்கல், மோகனூர், எருமபட்டி ஊராட்சி ஒன்றியங்களை உள்ளடக்கிய 16-ஆவது வார்டு ஆகியவை பொது பெண் பிரிவுக்கும், எருமபட்டி ஊராட்சி ஒன்றியத்தை உள்ளடக்கிய 17-ஆவது வார்டு எஸ்சி பெண் பிரிவுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவி எஸ்சி பெண் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மாவட்ட கவுன்சிலர் வார்டுகளில் 5, 7, 17 ஆகிய வார்டுகள் எஸ்சி பெண் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வார்டுகளில் வெற்றிபெறும் 3 கவுன்சிலர்களில் ஒருவர் மாவட்ட ஊராட்சித் தலைவராவது உறுதியாகி உள்ளது. இதனால், இப்போதே தேர்தல் போட்டிக்கான ஆயத்தப் பணிகளில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai