சுடச்சுட

    

    சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.232.14 கோடி கடன் தள்ளுபடி : அமைச்சர் வி.சரோஜா

    By DIN  |   Published on : 25th September 2016 05:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான வேளாண் கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் ரூ.232.14 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டு 46,634 விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர் என்றார் சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர் வி.சரோஜா.
    கூட்டுறவுத் துறையின் சார்பில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான வேளாண் கடன் தள்ளுபடித் திட்டத்தின் கீழ் வேளாண் கடன் தள்ளுபடி பெற்ற விவசாயிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா மற்றும் வருவாய்த் துறையின் சார்பில் முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நாமக்கல்லில் வியாழக்கிழமை நடைபெற்றது.
    மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தலைமை வகித்தார். நாமக்கல் எம்.பி பி.ஆர்.சுந்தரம், எம்எல்ஏக்கள் கே.பி.பி.பாஸ்கர், சி.சந்திரசேகரன் முன்னிலை வகித்தனர்.
    சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர் வி.சரோஜா பங்கேற்று வேளாண் கடன் தள்ளுபடி பெற்ற விவசாயிகளுக்கு சான்றிதழ்களையும், முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளையும் வழங்கிப் பேசியது:
    முதல்வர் தேர்தல் நேரத்தில் அளித்த சிறு, குறு விவசாயிகள் பெற்றுள்ள கூட்டுறவு கடன்கள் அறவே தள்ளுபடி செய்யப்படும் என்ற வாக்குறுதியினை ஆட்சிப் பொறுப்பேற்ற முதல்நாளே முதல் கோப்பில் கையொப்பமிட்டு ரூ.5,780 கோடி அளவிற்கு சிறு குறு விவசாயிகளின் கடன்களை முற்றிலும் தள்ளுபடி செய்துள்ளார்.
    இந்த திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக 46,471 சிறு குறு விவசாயிகள் பெற்ற கடன்களுக்கான அசல், வட்டி, அபராத வட்டி மற்றும் இதர செலவுகள் சேர்த்து அனைத்தும் ரூ.230.76 கோடி மதிப்பிலான கடன்களையும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளின் மூலமாக 163 சிறு, குறு விவசாயிகள் பெற்ற கடன் ரூ.1.38 கோடி மதிப்பிலான கடன்களையும் என மொத்தம் நாமக்கல் மாவட்டத்தில் 46,634 சிறு குறு விவசாயிகள் பெற்ற ரூ.232.14 கோடி கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்றார். விழாவில், வருவாய்த் துறையின் சார்பில் மொத்தம் 2,085 பயனாளிகளுக்கு ரூ.2,23,42,896 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளையும் அமைச்சர் வழங்கினார்.
    திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் ஜி.மகாத்மா வரவேற்றார். கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் (பொறுப்பு) எஸ்.ராமதாஸ், சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியர் நா.பாலச்சந்திரன், மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கே.எஸ்.முரளிகிருஷ்ணன், வட்டாட்சியர்கள் சுகுமார், தமிழ்மணி, ரா.தமிழ்மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai