சுடச்சுட

  

  சென்னை ஸ்ரீராமசந்திரா மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம்

  By DIN  |   Published on : 25th September 2016 05:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சென்னை ஸ்ரீராமசந்திரா மருத்துவமனை மற்றும் மருத்துவப் பல்கலைக்கழகம் சார்பில் இலவச பல்துறை மருத்துவப் பரிசோதனை முகாம் சனிக்கிழமை ராசிபுரத்தில் நடைபெற்றது.
  ஸ்ரீராமசந்திரா மருத்துவக் கல்லூரியின் நிறுவனர் ராமசாமி உடையார் நினைவாக, அவரது சொந்த ஊரான ராசிபுரம் நகரில் ஆண்டுதோறும் இலவச மருத்துவ முகாம் இரு நாள்கள் நடத்தப்பட்டு வருகிறது. 12-ம் ஆண்டாக ராசிபுரம் பூவாயம்மாள் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை தொடங்கிய மருத்துவ முகாமை ராமசந்திரா மருத்துவமனை இருதய நோய் சிறப்பு மருத்துவர் எஸ்.தணிகாசலம் குத்துவிளக்கேற்றித் துவக்கி வைத்தார்.
  இம் முகாமில் பொது அறுவை சிகிச்சை மருத்துவர் கே.பாலாஜி சிங், டீன் மற்றும் தோல் மருத்துவர் எஸ்.ஆனந்தன், புற்றுநோய் சிறப்பு மருத்துவர் ஸ்ரீராம் உள்ளிட்ட மருத்துவர்கள் தலைமையில், பல்கலைக்கழகத்தின் மருத்துவக் குழுவினர் பொதுமக்களுக்கு இலவச பரிசோதனை மேற்கொண்டனர். நடமாடும் நவீன எக்ஸ்ரே வசதி, நடமாடும் பல் மருத்துவ வாகனம் போன்றவை கொண்டுவரப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டது. மேலும், காது கேட்பியல் துறை சார்பில் 5 ஏழை நோயாளிகளுக்கு ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள காது கேட்கும் கருவி மருத்துவ கல்லூரி முன்னாள் மாணவர் அமைப்பால் வழங்கப்படுவதாக முகாமில் அறுவை சிகிச்சை மருத்துவர் கே.பாலாஜி சிங் தெரிவித்தார்.
  முகாமில் சிறுநீரகம், நரம்பியல், கண், எலும்பு, பல், காது, மூக்கு, தொண்டை போன்ற நோய்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட், இசிஜி, எக்கோ போன்றவையும், மருந்து மாத்திரைகளும் இலவசமாக நோயாளிகளுக்கு வழங்கப்பட்டன. மேல் சிகிச்சைக்கு தேவைப்படுவோர் சென்னை ஸ்ரீராமசந்திரா மருத்துவமனையில் இலவச சிகிச்சைக்காகப் பரிந்துரைக்கப்பட்டனர். இம் முகாமில் பேச்சுத் திறன் குறைபாடு, மொழித் திறன் குறைபாடு, செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு சிறப்புக் குழுவினர் பரிசோதித்து சிகிச்சையளித்தனர். இம் முகாம் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறும்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai