சுடச்சுட

  

  நாமக்கல் இளைஞர் கதநாயகனாக நடித்த திரைப்படம்: 2 லட்சம் பாடல் சி.டி-கள் முன்பதிவு

  By DIN  |   Published on : 25th September 2016 05:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  : நாமக்கல்லைச் சேர்ந்த கோபிகாந்தி நடித்த "வைரமகன்' என்ற திரைப்பட பாடல் சி.டி.-கள் 2 லட்சம் எண்ணிக்கைக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
  நாமக்கல்லைச் சேர்ந்த ஆர்எஸ்ஜி சமூக சேவை மையத்தின் தலைவராக உள்ள கோபிகாந்தி சமுதாய விழிப்புணர்வு குறும்படங்களை வெளியிட்டு புகழ் பெற்றார். அவர் 2014ஆம் ஆண்டு "முதல் மாணவன்' என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து, தயாரித்து வெளியிட்டார்.
  தற்போது வைரமகன், வீரக்கலை ஆகிய இரண்டு திரைபடங்களைத் தயாரித்து, அவரே கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் வீரக்கலை படத்தின் விநியோக உரிமையை பீனிக்ஸ் எண்டர்டெயின்மெண்ட் என்ற கார்ப்பரேட் நிறுவனம் வாங்கி 4 மொழிகளில் மொழியாக்கம் செய்து வரும் டிசம்பர் மாதம் வெளியிட ஏற்பாடு செய்து வருகிறது.
  இதுகுறித்து கோபிகாந்தி கூறியது: தற்போது முகநூல், கட்செவி அஞ்சல், சுட்டுரை போன்ற சமூக வலைதளங்களில் திரைப்படம் பார்ப்பது அதிகரித்து வருகிறது. பலர் திரையரங்குகளுக்குச் சென்று படம் பார்க்கும் மனநிலையில் இல்லை. இந்த நிலையில், திரைப்படத்தை லாபகரமாக வெளியிட, புதிய யுக்தியை கையாள வேண்டியுள்ளது.
  இதையொட்டி, வைரமகன் பாடல் சி.டி.யை மிகவும் குறைந்து விலைக்கு விற்பனை செய்ய முடிவு செய்து, மாவட்ட வாரியாக முகவர்களை நியமனம் செய்து முன்பதிவு செய்தோம். இதனால் இதுவரை 2 லட்சம் சி.டி.க்கு ரசிகர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.
  பாடல் சி.டி. வெளியீட்டு விழா விரைவில் சென்னையிலும், அதைத் தொடர்ந்து நாமக்கல்லிலும் நடைபெற உள்ளது. அதன் பின்னர், வீரக்கலை திரைப்படம் வெளியீட்டு விழா நடைபெறும் என்றார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai