சுடச்சுட

    

    நாமக்கல் மாவட்டத்தில் பேரூராட்சிகள் வார்டு இட ஒதுக்கீடு விவரம் வெளியீடு

    By DIN  |   Published on : 25th September 2016 05:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 19 பேரூராட்சிகளில் உள்ள வார்டுகளுக்கு இட ஒதுக்கீடு விவரம் அரசிதழில் வெளியாகி உள்ளது.
    உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளாட்சி அமைப்புகளில் எஸ்.சி. பெண், எஸ்.சி. பொது, பொது பெண், பொதுப்பிரிவு இட ஒதுக்கீடு விவரங்கள் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன.
    நாமக்கல் மாவட்டத்தில் 19 பேரூராட்சிகள் உள்ளன. இதில் சேந்தமங்கலம், நாமகிரிப்பேட்டை மற்றும் வேலூர் பேரூராட்சிகளில் தலா 18 வார்டுகள் உள்ளன. ஆலம்பாளையம், மல்லசமுத்திரம், மோகனூர், படவீடு, பரமத்தி, பாண்டமங்கலம், பொத்தனூர், அத்தனூர், எருமப்பட்டி, காளப்பநாயக்கன்பட்டி, பட்டணம், பிள்ளாநல்லூர், சீராப்பள்ளி, வெண்ணந்தூர், வெங்கரை, ஆர்.புதுப்பட்டி ஆகிய 16 பேரூராட்சிகளில் தலா 15 வார்டுகள் உள்ளன.
    பேரூராட்சி வார்டு வாரியாக இட ஒதுக்கீடு விவரம்: ஆலாம்பாளையம் பேரூராட்சியில் 15-ஆவது வார்டு எஸ்சி பொது, 10-ஆவது வார்டு எஸ்சி பெண், 1,3,4,5,6,9,14 ஆகிய வார்டுகள் பொது பெண் பிரிவுக்கும், எஞ்சிய 6 வார்டுகள் பொதுப்பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
    மல்லசமுத்திரம் பேரூராட்சியில் 10-ஆவது வார்டு எஸ்சி பொது, 9-ஆவது வார்டு எஸ்சி பெண், 2,3,4,6,12,13,14 ஆகிய வார்டுகள் பொது பெண் பிரிவுக்கும், எஞ்சிய 6 வார்டுகள் பொதுப் பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
    மோகனூர் பேரூராட்சியில் 6-ஆவது வார்டு எஸ்சி பொது, 7-ஆவது வார்டு எஸ்சி பெண், 2,3,4,5,10,12,13 ஆகிய வார்டுகள் பொது பெண் பிரிவுக்கும், எஞ்சிய 6 வார்டுகள் பொதுப்பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
    நாமகிரிப்பேட்டை பேரூராட்சியில் 1,3,6 ஆகிய வார்டுகள் எஸ்சி பொது, 4,10,13 ஆகிய வார்டுகள் எஸ்சி பெண், 9,12,14,15,16,17 ஆகிய வார்டுகள் பொது பெண் பிரிவுக்கும், எஞ்சிய 6 வார்டுகள் பொதுப் பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
    படவீடு பேரூராட்சியில் 12,13 ஆகிய வார்டுகள் எஸ்சி பொது, 2,5,15 ஆகிய வார்டுகள் எஸ்சி பெண், 3,4,6,9,11 ஆகிய வார்டுகள் பொது பெண் பிரிவுக்கும், எஞ்சிய 5 வார்டுகள் பொதுப்பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
    பரமத்தி பேரூராட்சியில் 7-ஆவது வார்டு எஸ்சி பொது, 1,4-ஆவது வார்டுகள் எஸ்சி பெண், 3,5,10,11,12,13 ஆகிய வார்டுகள் பொது பெண் பிரிவுக்கும், எஞ்சிய 6 வார்டுகள் பொதுப்பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
    பாண்டமங்கலம் பேரூராட்சியில் 12-ஆவது வார்டு எஸ்சி பொது, 13-ஆவது வார்டு எஸ்சி பெண், 2,4,5,6,7,9,15ஆகிய வார்டுகள் பொது பெண் பிரிவுக்கும், எஞ்சிய 6 வார்டுகள் பொதுப்பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
    பொத்தனூர் பேரூராட்சியில் 9-ஆவது வார்டு எஸ்சி பெண், 2,8,10,11,12,13,14ஆகிய வார்டுகள் பொது பெண் பிரிவுக்கும், எஞ்சிய 7 வார்டுகள் பொதுப்பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
    சேந்தமங்கலம் பேரூராட்சியில் 5,6-ஆவது வார்டுகள் எஸ்சி பொது, 7,8,17-ஆவது வார்டுகள் எஸ்சி பெண், 1,2,13,14,15,18 ஆகிய வார்டுகள் பொது பெண் பிரிவுக்கும், எஞ்சிய 7 வார்டுகள் பொதுப்பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
    வேலூர் பேரூராட்சியில் 2-ஆவது வார்டு எஸ்சி பொது, 12-ஆவது வார்டு எஸ்சி பெண், 4,6,7,9,10,13,15,16 ஆகிய வார்டுகள் பொது பெண் பிரிவுக்கும், எஞ்சிய 8 வார்டுகள் பொதுப்பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
    அத்தனூர் பேரூராட்சியில் 2,6-ஆவது வார்டுகள் எஸ்சி பொது, 4,15-ஆவது வார்டுகள் எஸ்சி பெண், 5,8,10,11,12,13 ஆகிய வார்டுகள் பொது பெண் பிரிவுக்கும், எஞ்சிய 5 வார்டுகள் பொதுப் பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
    எருமபட்டி பேரூராட்சியில் 3-ஆவது வார்டு எஸ்சி பொது, 2-ஆவது வார்டு எஸ்சி பெண், 1,5,7,9,10,11,12 ஆகிய வார்டுகள் பொது பெண் பிரிவுக்கும், எஞ்சிய 6 வார்டுகள் பொதுப்பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
    காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சியில் 8,11-ஆவது வார்டுகள் எஸ்சி பொது, 6,7,12-ஆவது வார்டுகள் எஸ்சி பெண், 3,4,5,13,15ஆகிய வார்டுகள் பொது பெண் பிரிவுக்கும், எஞ்சிய 5 வார்டுகள் பொதுப்பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
    பட்டணம் பேரூராட்சியில் 3,6,7-ஆவது வார்டுகள் எஸ்சி பொது, 2,8,9,11-ஆவது வார்டுகள் எஸ்சி பெண், 10,12,13,14ஆகிய வார்டுகள் பொது பெண் பிரிவுக்கும், எஞ்சிய 4 வார்டுகள் பொதுப் பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
    பிள்ளாநல்லூர் பேரூராட்சியில் 12 -ஆவது வார்டு எஸ்சி பெண், 2,5,6,7,9,11,13 ஆகிய வார்டுகள் பொது பெண் பிரிவுக்கும், எஞ்சிய 7 வார்டுகள் பொதுப் பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
    சீராப்பள்ளி பேரூராட்சியில் 8,10,11-ஆவது வார்டுகள் எஸ்சி பொது, 2,4,12-ஆவது வார்டுகள் எஸ்சி பெண், 1,5,7,13,14ஆகிய வார்டுகள் பொது பெண் பிரிவுக்கும், எஞ்சிய 4 வார்டுகள் பொதுப் பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
    வெண்ணந்தூர் பேரூராட்சியில் 6-ஆவது வார்டு எஸ்சி பெண், 4,7,8,9,10,11,13 ஆகிய வார்டுகள் பொது பெண் பிரிவுக்கும், எஞ்சிய 7 வார்டுகள் பொதுப் பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
    வெங்கரை பேரூராட்சியில் 4-ஆவது வார்டு எஸ்சி பெண், 1,2,5,8,11,12,15 ஆகிய வார்டுகள் பொது பெண் பிரிவுக்கும், எஞ்சிய 7 வார்டுகள் பொதுப்பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
    ஆர்.புதுப்பட்டி பேரூராட்சியில் 14,15-ஆவது வார்டுகள் எஸ்சி பொது, 2,5,13-ஆவது வார்டுகள் எஸ்சி பெண், 3-ஆவது வார்டு எஸ்டி பெண், 1,4,6,7ஆகிய வார்டுகள் பொது பெண் பிரிவுக்கும், எஞ்சிய 5 வார்டுகள் பொதுப்பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai