Enable Javscript for better performance
பரமத்தி ஒன்றியத்தில் ரூ.40.73 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    பரமத்தி ஒன்றியத்தில் ரூ.40.73 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

    By DIN  |   Published on : 25th September 2016 05:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமத்தி வேலூர் வட்டம், பரமத்தி ஊராட்சி ஒன்றியப் பகுதியில் ரூ.40.73 லட்சம் செலவில் நடைபெற்றுவரும் பல்வேறு பணிகளை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.
    பரமத்தி ஒன்றியத்தில் உள்ள வில்லிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் தூய்மை பாரத இயக்கம் சார்பில் திறந்தவெளி மலம் கழித்தல் இல்லா ஊராட்சியாக உருவாக்குதல் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆசியா மரியம் துவக்கி வைத்துப் பேசியதாவது:
    சுகாதாரத்தைப் பாதுகாத்திடும் வகையில் சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும். வீடுகள் தோறும் கழிப்பிடங்கள் அமைத்து முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். திறந்த வெளியில் மலம் கழிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். திறந்த வெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செம்பருத்தி கலைக் குழுவைச் சேர்ந்த கலைக் குழுவினர் கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்க்க வேண்டும் என்றார்.
    வில்லிபாளையம் ஜங்கமநாயக்கன்பட்டியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.6.58 லட்சம் செலவில் மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வரும் பணிகளையும், வில்லிபாளையத்தில் ரூ.17 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள கிராம ஊராட்சி சேவை மைய கட்டடத்தையும், பரமத்தி இலங்கை அகதிகள் முகாமில் ரூ.17.15 லட்சம் செலவில் நடைபெற்றுவரும் பல்வேறு பணிகளையும் ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா,பரமத்தி வட்டாட்சியர் விஜயலட்சுமி, பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வருவாய்த் துறையினர் உட்பட பலர் உடனிருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai