Enable Javscript for better performance
மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    ராசிபுரம் முத்தாயம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் மாற்றுத் திறனாளிகளுக்கான தொழிற் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. முத்தாயம்மாள் கலை அறிவியல் கல்லூரி, கோவை செஷயர் ஹோம்ஸ், நாமக்கல் மாற்றுத் திறனாளிகள் நல வாரியம் ஆகியன இணைந்து இதனை நடத்தின.
    இம் முகாமை, கல்லூரித் தலைவர் கே.பி.ராமசுவாமி தொடங்கி வைத்தார். செயலர் ஆர்.முத்துவேல், இயக்குநர் மஞ்சுமுத்துவேல், கல்லூரி முதல்வர் ஆர்.செல்வகுமரன், டீன் ஏ.ஸ்டெல்லா பேபி, செஷயர் ஹோம்ஸ் அமைப்பின் செயலர் ஜி.தனலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    இம் முகாமில் 400-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு தொழிற் பயிற்சி, சம்ளத்துடன் கூடிய வேலைவாய்ப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், மருத்துவ உதவி, வங்கி உதவி, தொழில் முனைவுக்கான பயிற்சி, மூப்பொருள்கள், உதவித்தொகை வசதி, ஊதுபத்தி, சாம்பிராணி தயாரிக்கும் கருவிகள் போன்றவை வழங்கப்பட்டன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai