சுடச்சுட

    

    ஆடு திருடியவர் மீது நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை

    By நாமக்கல்  |   Published on : 27th September 2016 08:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆடு திருடியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
     நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டை குருவாளா கிராமத்தைச் சேர்ந்த மக்கள் விடுதலைக்களம் இயக்கத் தலைவர் நாகராஜன் தலைமையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரனிடம் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்:
     குருவாளா கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வசித்து வருகின்றனர்.
     இந்த கிராமம் கொல்லிமலை அடிவாரம் கரியபெருமாள் மலை அருகில் உள்ளது.
     குருவாளா கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் கரியபெருமாள் மலையில் ஆடுகளை மேய்ச்சலுக்காகக் கொண்டு செல்வர். கடந்த சில தினங்களாக கரியபெருமாள்மலைக்கு மேய்ச்சலுக்குச் செல்லும் ஆடுகள் திடீரென மாயமாகி வந்தன.
     கடந்த 17-ஆம் தேதி முருகேசன் என்பவரது 9 ஆடுகள் திடீரென மாயமானது.
     அதிர்ச்சி அடைந்த முருகேசன் அம்மலைக்குச் சென்று பார்த்த போது, கொல்லிமலையைச் சேர்ந்த குப்பன் என்பவர் ஆடுகளைத் திருடிச் சென்று கொண்டிருந்தார்.
     அவரை கையும் களவுமாகப் பிடித்த முருகேசன், நாமகிரிப்பேட்டை போலீஸில் ஒப்படைத்தார்.
     ஆடு திருடிய குப்பன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அவருக்குச் சாதகமாக போலீஸார் செயல்பட்டு வருகின்றனர். எனவே, ஆடு திருடியவருக்கு சாதகமாகச் செயல்பட்ட நாமகிரிப்பேட்டை போலீஸார் மீதும், ஆடு திருடியவர் மீது காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai